முகப்பு /செய்தி /entertainment / படத்தின் ப்ரமோஷனுக்காக பிரபல சீரியலில் நடிக்கும் வீட்ல விசேஷங்க படக்குழுவினர்!

படத்தின் ப்ரமோஷனுக்காக பிரபல சீரியலில் நடிக்கும் வீட்ல விசேஷங்க படக்குழுவினர்!

தேவையானியுடன் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் அபர்ணா பாலமுரளி

தேவையானியுடன் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் அபர்ணா பாலமுரளி

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தேவயானி, பார்வதி, நியாஸ் உள்ளிட்டோர் இணைந்து நடித்து வரும் புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் வீட்ல விஷேசம் படத்தின் ப்ரோமோஷனுக்காக ஆர் ஜே பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

வீட்ல விசேஷங்க படத்தின் ப்ரமோஷனுக்காக புதுப்புது அர்த்தங்கள் என்ற பிரபல சீரியலில் படக்குழுவினர் நடித்துள்ளனர்.

பாலிவுட்டில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில், போனி கபூர் தயாரிப்பில் வெளியான இந்தி திரைப்படம் தான் ‘பதாய் ஹோ’.இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் இதன் தமிழ் ரீமேக் படம் தான் வீட்ல விசேஷம். இந்த படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கி, நடித்து இருக்கிறார்.

இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்து இருக்கிறார். மேலும், படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சத்யராஜ் மற்றும் ஊர்வசி நடித்து உள்ளனர்.

இந்த நிலையில் வரும் ஜூன் 17-ம் தேதி வெளியாக உள்ள வீட்ல விஷேசம் படத்திற்காக படக்குழு புது முயற்சியை முன்னெடுத்துள்ளது.

பொதுவாக சீரியல்களுக்கு எப்போதும் மக்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு. லட்சக்கணக்கான மக்கள் தினம்தோறும் தவறாமல் சீரியல்களை பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இப்படியான சீரியல்கள் மூலமாக ஒரு படத்தை ப்ரமோஷன் செய்தால் அது நிச்சயம் பல லட்சம் குடும்பங்களுக்கு சென்று சேரும்.

Also read... வசூலில் புதிய சாதனை படைத்த கமல் ஹாசனின் விக்ரம் படம்!

இந்நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தேவயானி, பார்வதி, நியாஸ் உள்ளிட்டோர் இணைந்து நடித்து வரும் புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் வீட்ல விஷேசம் படத்தின் ப்ரோமோஷனுக்காக ஆர் ஜே பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஏற்கனவே 350-க்கும் மேற்பட்ட எபிசோடுகளை கடந்துள்ள இந்த சீரியலின் விறுவிறுப்பை மேலும் கூட்டும் வகையிலும் படக்குழுவினர் இந்த சீரியலில் இணைந்து நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actress Aparna Balamurali, RJ Balaji, Zee Tamil Tv