Home /News /entertainment /

Ajith - 61: இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக தாய்லாந்து செல்கிறார் அஜித்!

Ajith - 61: இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக தாய்லாந்து செல்கிறார் அஜித்!

அஜித்

அஜித்

Ajith - 61: நடிகர் அஜித் தன்னுடைய 61வது படத்திற்கான டப்பிங் வேலைகளையும்  விரைவில் தொடங்க உள்ளார். 

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
அஜித் 61 படத்திற்கான இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக அடுத்த வார இறுதியில் படக்குழுவினர் தாய்லந்த் செல்கிறது. 

நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை தொடர்ந்து எச்.வினோத் இயக்கம் புதிய படத்தில் அஜித் நடித்த வருகிறார். அந்த திரைப்படத்திற்கான 80 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டன.  மீதம் இருக்கும் 20 சதவீத காட்சிகளை தாய்லாந்து நாட்டில் படமாக்க உள்ளனர்.

இதற்காக அடுத்த வார இறுதியில் படக்குழு தாய்லாந்து செல்கிறது. அங்கு அஜித் பங்குபெறும் சண்டை காட்சிகளை படமாக்க இயக்குநர் எச்.வினோத் திட்டமிட்டிருக்கிறார்.

இந்த நிலையில் நடிகர் அஜித் தன்னுடைய வசனக்காட்சிகளுக்கு  விரைவில் டப்பிங் பேச உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. அஜித் - எச்.வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாக்கும் இந்த திரைப்படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிட திட்டமிட்டிருக்கின்றனர்.

 Also read... தேசிய சினிமா தினம் செப்டம்பர் 16 கிடையாது - எந்த தேதி தெரியுமா?

மேலும் ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனம் படத்தை விநியோகம் செய்ய உள்ளது இந்த திரைப்படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர் நாயகியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Ajith, Entertainment

அடுத்த செய்தி