Home /News /entertainment /

ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட நட்சத்திரம் நகர்கிறது படத்தின் இறுதிக் காட்சி!

ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட நட்சத்திரம் நகர்கிறது படத்தின் இறுதிக் காட்சி!

நட்சத்திரம் நகர்கிறது

நட்சத்திரம் நகர்கிறது

பா.ரஞ்சித் இயக்கியுள்ள நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் வரும் 31 ஆம் தேதி வெளியாகிறது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் இறுதி பதினைந்து நிமிட காட்சி ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருப்பதாக பட குழுவினர் தெரிவித்திருக்கின்றனர். 

பா.ரஞ்சித் இயக்கியுள்ள நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் வரும் 31 ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு நாயகன் காளிதாஸ் ஜெயராம் நாயகி துஷாரா விஜயன், மற்றும் நடிகர் கலையரசன் ஆகியோர் பேட்டி அளித்தனர்.

அதில் படத்தைப் பற்றி பல சுவாரசியங்கள் பகிர்ந்துள்ளனர். மேலும் படத்தின் இறுதி பதினைந்து நிமிட காட்சிகளை ஒரே ஷார்ட்டில் படமாக்கியதாக கூறினர். அந்த காட்சியை மேடை நாடகம் போல் பா.ரஞ்சித் உருவாக்கினார். மேடை நாடக கலைஞர்களை  போல் காட்சிக்கு காட்சி உடைமாற்றி நடித்தோம்.  அது சிறப்பாக வந்திருப்பதாக தெரிவித்தனர்.

Also read... விஷாலின் மார்க் ஆண்டனி படம் ரிலீஸ் எப்போது? புதிய அப்டேட்!

மேலும் இந்த திரைப்படத்தில் பா.ரஞ்சித் கூறியிருக்கும் கருத்து மிக முக்கியமானது என்றும் கூறினர். அத்துடன் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையை குறித்து நாயகன் நாயகி ஆகியோர் தங்கள் வாழ்க்கையின் விருப்பம், வெறுப்புகளை கூறும் காட்சி ரசிகர்களை அதிகம் கவரும் என தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment, Pa. ranjith

அடுத்த செய்தி