பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது ’ராதே ஷ்யாம்’ மோஷன் வீடியோ!

படத்தில், சச்சின் கேடேகர், பாக்யஸ்ரீ, பிரியதர்ஷி, முரளி ஷர்மா, சாஷா சேத்ரி, குனால் ராய் ஆகியோர் நடித்துள்ளனர்.இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் படம் வெளியிடப்படுகிறது.

பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது ’ராதே ஷ்யாம்’ மோஷன் வீடியோ!
ராதே ஷ்யாம் படத்தின் மோஷன் வீடியோ
  • News18
  • Last Updated: October 23, 2020, 3:33 PM IST
  • Share this:
பிரபாஸின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் அவரது நடிப்பில் உருவாகும் ராதே ஷ்யாம் படத்தின் மோஷன் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

ராதே ஷ்யாம் அறிவிக்கப்பட்ட நாள் முதலே தெலுங்கு சினிமாத் துறையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். முன்னதாக, இம்மாதத் தொடக்கத்தில் பூஜா, பிரபாஸ் கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

படத்தில் பிரபாஸின் புத்துணர்வு தரும் தோற்றம் ரசிகர்களை சுண்டி இழுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. ஏற்கெனவே ரசிகர்கள் எதிர்பார்ப்பைத் தூண்டியிருந்த நிலையில், இன்று பிரபாஸின் பிறந்தநாள் என்பதால் அதை மேலும் இனிமையானதாக்கும் வகையில் படக்குழு படத்தின் மோஷன் வீடியோவை வெளியிட்டுள்ளது.


அழகியல் ததும்பும் அடர்ந்த வனத்தின் பாதையில் சீறிப் பாயும் ரயிலை காட்சிப்படுத்தி அந்த மோஷன் வீடியோ தொடங்குகிறது. அப்படியே விரியும் காட்சிகள் அந்த ரயிலின் வெவ்வேறு பெட்டியில் பயணிக்கும் விக்ரமாதித்யா, பிரேரனாவின் மீது படர்கிறது.Also read... நடிகர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தை தயாரிப்பாளர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் - டி.ராஜேந்தர்இருவரும் வெவ்வேறு கலாச்சாரத்தைச் சார்ந்தவர்கள். வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள். விகர்மாதித்யா, பிரேரனாவின் அறிமுகக் காட்சி ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் கூட்டும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், ராதே ஷ்யாம், ஐரோப்பாவில் நடைபெறும் ஒரு மகத்தான காதல் காவியமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

படத்தில், சச்சின் கேடேகர், பாக்யஸ்ரீ, பிரியதர்ஷி, முரளி ஷர்மா, சாஷா சேத்ரி, குனால் ராய் ஆகியோர் நடித்துள்ளனர்.இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் படம் வெளியிடப்படுகிறது. படத்தை ராதா கிருஷ்ண குமார் இயக்குகிறார். வம்சி மற்றும் பிரமோத் யுவி கிரியேஷன்ஸ் பேனரில் தயாரிக்கின்றனர்.
First published: October 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading