Home /News /entertainment /

கைதி கார்த்தி போன்ற தோற்றத்தில் நடிகர் விஷால் - மார்க் ஆண்டனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

கைதி கார்த்தி போன்ற தோற்றத்தில் நடிகர் விஷால் - மார்க் ஆண்டனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

மார்க் ஆண்டனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

மார்க் ஆண்டனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

நடிகர் விஷாலின் பிறந்த நாளை முன்னிட்டு மார்க் ஆண்டனி படத்தின் முதல் பார்வையை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.  அதில் அதிக தாடி மற்றும் தலைமுடியுடன் துப்பாக்கி வைத்துக் கொண்டு இருக்கும் விஷாலின் தோற்றம் பதிவாகியுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் முதல் பார்வையை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

நடிகர் விஷால் தற்போது லத்தி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். அதில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நடிகர் விஷாலின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் முதல் பார்வையை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.  அதில் அதிக தாடி மற்றும் தலைமுடியுடன் துப்பாக்கி வைத்துக் கொண்டு இருக்கும் விஷாலின் தோற்றம் பதிவாகியுள்ளது.

இந்த தோற்றம் கைதி திரைப்படத்தில் இடம்பெற்ற கார்த்தி போன்று காட்சியளிக்கிறது. மார்க் ஆண்டனி திரைப்படத்தில் இரண்டு விதமான தோற்றங்களில் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் வருகின்றனர்.



அதில் ஒரு விஷாலின் தோற்றத்தை இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.  இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். அதேபோல் நடிகர் தனுஷ் இடம் மேலாளராக இருந்து தயாரிப்பாளராக மாறிய வினோத்குமார் மார்க் ஆண்டனி திரைப்படத்தை தயாரிக்கிறார்.

Also read... கமல் ரசித்த சத்யராஜின் தகடு தகடு வசன உச்சரிப்பு

இவர் ஏற்கனவே விஷால் நடிப்பில் வெளியான எனிமி திரைப்படத்தை தயாரித்திருந்தார். மார்க் ஆண்டனி திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் Pan Indian படமாக வெளியிட உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor vishal, Entertainment, SJSurya

அடுத்த செய்தி