Home /News /entertainment /

பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்… ஆவலைத் தூண்டும் வீடியோ

பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்… ஆவலைத் தூண்டும் வீடியோ

பொன்னியின் செல்வன் லேட்டஸ்ட் போஸ்டர்

பொன்னியின் செல்வன் லேட்டஸ்ட் போஸ்டர்

Ponniyin Selvan Update : ஏ.ஆர். ரகுமானின் பின்னணி இசையுடன், சோழர்கள் வருகிறார்கள் என்ற வாசகம் அடங்கிய16 வினாடி வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான ஆவலை அதிகப்படுத்தியுள்ளது. இந்த வாரத்தில் படத்தின் டீசர் அல்லது பாடல் வெளியாகக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் வரலாற்று புதினத்தை அறியாதவர் யாரும் இருக்க முடியாது. அதனை திரைப்படமாக இயக்குனர் மணி ரத்னம் உருவாக்கி வருகிறார். மொத்தம் 2 பாகங்களாக பொன்னியின் செல்வன் திரைப்படமாக வெளியாகவுள்ளது.

    முதல் பாகத்தை செப்டம்பர் 30-ம்தேதி வெளியிடவுள்ளனர். இந்த படத்தில் விக்ரம், ஐஷ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா உள்பட ஏராளமானோர் நடித்துள்ளார்கள்.

    இதையும் படிங்க - Yaanai Movie Review : அருண் விஜய் நடித்திருக்கும் ’யானை’ படம் எப்படி இருக்கு?

    லைகா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல் மற்றும் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் சூப்பர் அப்டேட் ஒன்றை வெளியிட்டு பொன்னியின் செல்வன் படக்குழுவினர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.

    ஏ.ஆர். ரகுமானின் பின்னணி இசையுடன், சோழர்கள் வருகிறார்கள் என்ற வாசகம் அடங்கிய16 வினாடி வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





    9-ம் நூற்றாண்டில் சோழர்களைப் பற்றிய வரலாற்றை பொன்னியின் செல்வன் பதிவு செய்கிறது.



    இதையும் படிங்க - அரசியலில் நுழையும் எந்த எண்ணமும் இல்லை - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷால்

    இந்த படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரம், அருள் மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்திய தேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஷ்வர்யா ராய், குந்தவையாக த்ரிஷா, பெரிய பழுவேட்டரையாராக சரத்குமார், பராந்தக சோழனாக பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Ponniyin selvan

    அடுத்த செய்தி