Home /News /entertainment /

பாவ மன்னிப்பு பாடலில் மதத்தில் கை வைக்க மறுத்த தணிக்கைக்குழு

பாவ மன்னிப்பு பாடலில் மதத்தில் கை வைக்க மறுத்த தணிக்கைக்குழு

பாவ மன்னிப்பு

பாவ மன்னிப்பு

பாவ மன்னிப்பு படத்தின் கதை நடிகர் சந்திரபாபு சொன்னது. இந்துவாகப் பிறந்த ஒருவன், முஸ்லீமாக வளர்க்கப்பட்டு, கிறிஸ்தவ பெண்ணை திருமணம் செய்கிறான் என்று அவர் சொன்ன கதைப் பிடித்து பீம்சிங் அதனை சந்திரபாபுவை வைத்து படமாக்கினார்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
1961 இல் பீம்சிங்கின் பாவ மன்னிப்பு வெளியானது. சிவாஜியை வைத்து அவர் இயக்கிய 'ப' வரிசைப் படங்களில் இதுவும் ஒன்று. படம் அனைத்து சென்டர்களிலும் கலெக்ஷனை அள்ளிக் குவித்து வெற்றிவிழா கண்டது.

விஸ்வநாதன் - ராமமூர்த்தி பாவ மன்னிப்புக்கு இசையமைத்தனர். அவர்களின் ஆஸ்தான கவி கண்ணதாசன் பாடல்களை எழுதினார். அத்தான் என்னத்தான்..., எல்லோரும் கொண்டாடுவோம்..., காலங்களில் அவள் வசந்தம்..., பால் இருக்கு பழம் இருக்கு..., சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்..., என படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் காலம்கடந்தும் ரசிக்கப்படுகின்றன. இதில் சிறப்பான இன்னொரு பாடல், வந்த நாள் முதல்...

மெல்லிசை மன்னர்களின் தனிச்சிறப்பான விசில் ஒலியில் இந்தப் பாடல் தொடங்கும். என்னியோ மாரிகோனிக்குப் பிறகு விசில் சத்தத்தை திறமையாக கையாண்டவர்கள் மெல்லிசை மன்னர்கள். பாடல் வரிகளில் கண்ணதாசன் தனது கவித்துவத்தையும், தத்துவத்தையும் கொட்டியிருப்பார். வந்த நாள் முதல் இந்த நாள்வரை வானமோ, காற்றோ, அதுசார்ந்த இயற்கையோ மாறவில்லை, மனிதன் மாறிவிட்டான். மதத்தில் ஏறிவிட்டான் என்பது பாடலின் கான்செப்ட்.

நிலை மாறினால் என்னென்ன செய்வான் என்பதைச் சொல்லி, இயற்கையான அனைத்தையும் மனிதப்பயல் பிரித்துவிட்டான் என துயரத்தில் முடியும். நடுவில் வரும் சரணத்தில், மனிதன் விமானத்தையும், வானொலியையும் எப்படி கண்டுபிடித்தான் என்பதைக் கூறி, எதனை வைத்து இந்த மதங்களை படைத்தான் என்று கண்ணதாசன் எழுதியிருந்தார்.மதங்களை நேரடியாக குற்றம்சாட்டும் இந்த வரிகளை தணிக்கைக்குழு அனுமதிக்கவில்லை. அந்தளவு மதங்கள் விஷயத்தில் அவர்கள் இறுக்கமாக இருந்தார்கள். அதனால், 'எதனை கண்டான் மதங்களை படைத்தான்' என்பதை, 'எதனை கண்டான் பணந்தனை படைத்தான்' என மாற்றினர். அதன் பிறகே தணிக்கைச் சான்றிதழ் கிடைத்தது. இன்றும் மனதை மயக்கும் அந்த சிறப்பு வாய்ந்த பாடல்...

வந்த நாள் முதல் இந்த நாள் வரை

வானம் மாறவில்லை

வான் மதியும் நீரும் கடல் காற்றும்

மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை

மனிதன் மாறிவிட்டான்

மதத்தில் ஏறிவிட்டான்

நிலை மாறினால் குணம் மாறுவார் - பொய்

நீதியும் நேர்மையும் தேடுவார் - தினம்

ஜாதியும் பேதமும் கூறுவார் - அது

வேதன் விதியென்றோதுவார்

மனிதன் மாறிவிட்டான்

மதத்தில் ஏறிவிட்டான்

(வந்த நாள்)

பறவையைக்கண்டான் விமானம் படைத்தான் (2)

பாயும் மீன்களில் படகினைக்கண்டான்

எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்

எதனைக்கண்டான் பணம்தனைப் படைத்தான் (2)

மனிதன் மாறிவிட்டான்

மதத்தில் ஏறிவிட்டான்

(வந்த நாள்)

இன்பமும் காதலும் இயற்கையின் நீதி

ஏற்றதாழ்வுகள் மனிதனின் ஜாதி

பாரில் இயற்கை படைத்ததையெல்லாம்

மனிதன் மாறிவிட்டான்

மதத்தில் ஏறிவிட்டான்

(வந்த நாள்)பாவ மன்னிப்பு படத்தின் கதை நடிகர் சந்திரபாபு சொன்னது. இந்துவாகப் பிறந்த ஒருவன், முஸ்லீமாக வளர்க்கப்பட்டு, கிறிஸ்தவ பெண்ணை திருமணம் செய்கிறான் என்று அவர் சொன்ன கதைப் பிடித்து பீம்சிங் அதனை சந்திரபாபுவை வைத்து படமாக்கினார். அப்துல்லா என பெயரிட்டு, இரண்டாயிரம் அடிகள் எடுத்துப் பார்த்தபின் அவருக்கு படத்தில் திருப்தியில்லை.

Also read... Natchathiram Nagargirathu Twitter review: எப்படி இருக்கிறது நட்சத்திரம் நகர்கிறது படம்? - ட்விட்டர் விமர்சனம்!

ஏவிஎம் சரவணனிடம் படத்தைப் போட்டுக் காட்ட, கதையின் கான்செப்ட் அவருக்குப் பிடித்துப் போனது. அவர் தனது தந்தை ஏவி மெய்யப்ப செட்டியாரிடம் கூற, அவர் படத்தை பீம்சிங்குடன் இணைந்து தயாரிக்க முன்வந்தார். படத்தின் கதை மேலும் மாற்றி மெருகேற்றப்பட்டது. சந்திரபாபுக்குப் பதில் சிவாஜியை வைத்து பாவ மன்னிப்பு என்ற பெயரில் படமாக்கினர். படம் வெளிவந்து 175 நாள்கள் ஓடி மாபெரும் வெற்றியை பெற்றது.பாவ மன்னிப்புக்கு மூலைக்கல்லாக இருந்த சந்திரபாபுக்கு படத்தில் கிரெடிட் எதுவும் தரப்படவில்லை என்பது முக்கியமானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment

அடுத்த செய்தி