Home /News /entertainment /

மீண்டும் தீவிரம் அடையும் மலையாள நடிகையின் பாலியல் வழக்கு

மீண்டும் தீவிரம் அடையும் மலையாள நடிகையின் பாலியல் வழக்கு

நடிகை வழக்கு

நடிகை வழக்கு

இயக்குநர் பாலச்சந்திர குமாரின் வாக்குமூலத்தின் அடிப்படையிலும், அவர் வெளியிட்ட ஆடியோவின் அடிப்படையிலும் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகையை 2017-ம் ஆண்டு காரில் கடத்தில் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு இப்போது மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இந்த வழக்கில் நடிகர் திலீப், பல்சர் சுனி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். 74 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த நடிகர் திலீப், பின்னர் ஜாமினில் வெளியே வந்தார். இந்த நிலையில் நடிகர் திலீபின் நண்பராக இருந்த இயக்குநருமான பாலசந்திரகுமார் கடந்த மாதம் இறுதியில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது திலீப் குறித்த சில தகவல்களை வெளியிட்டார்.

    அதில், "நடிகையை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இப்போது சிறையில் இருக்கும் பல்சர் சுனிக்கும், நடிகர் திலீப்பிற்கு ஏற்கனவே நட்பு இருந்தது. நடிகர் திலீப்புடன் பல்சர் சுனியை நான் பார்த்திருக்கிறேன். அந்த நட்பு குறித்து வெளியே கூறினால் ஜாமின் கிடைக்காது என்பதால், அதுபற்றி வெளியே கூறக்கூடாது என திலீப் என்னிடம் கேட்டுக்கொண்டார். நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வீடியோவை திலீப் பார்த்தார்" என வெளிப்படுத்தினார் இயக்குநர் பாலச்சந்திரகுமார்.

    மேலும், நடிகர் திலீப் தன்னை கைது செய்த போலீஸ் அதிகாரிகளை பழிவாங்குவது பற்றி ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியானது. அதுமட்டுமல்லாது நடிகர் திலீப் குறித்த விபரங்களை எங்கு வேண்டுமானாலும் சொல்லலாம் எனவும், திலீப் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியதாகவும் இயக்குநர் பாலச்சந்திரகுமார் கூறியிருந்தார். இந்த நிலையில் நடிகர் திலீப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட நடிகை முதல்வருக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

    இதைத்தொடர்ந்து நடிகர் திலீப்பிடம் மீண்டும் விசாரணை நடத்தி அதுகுறித்த அறிக்கையை வரும் 20-ம் தேதிக்கு முன் கோர்ட்டில் ஒப்படைக்க கிரைம் பிரான்ச் போலீஸார் முடிவு செய்துள்ளனர். வரும் புதன்கிழமை இயக்குநர் பாலசந்திரகுமாரின் வாக்குமூலத்தை கோர்ட்டில் பதிவு செய்ய கிரைம் பிரான்ச் முடிவு செய்துள்ளது. இதற்கிடையே நடிகர் திலீப் மீது கிரைம் பிரான்ச் போலீஸார் புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். தான் கைது செய்யப்பட்ட கோபத்தில் விசாரணை செய்த போலீஸ் அதிகாரிக்கு ஆபத்தை ஏற்படுத்த திலீப் உள்ளிட்டவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டதாக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அவரை எனக்குப் பிடிக்கும் - சித்தார்த் ட்வீட்டுக்கு பதிலடி தந்த சாய்னா நேவால்!

    திருவனந்தபுரம் கிரைம் பிரான்ச் போலீஸ் ஸ்டேஷனின் 6/2022 என்ற எஃப்.ஐ.ஆர் நம்பரில் திலீப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐ.பி.சி செக்‌ஷன் 116, 118, 120 பி, 506, 34 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி இரவு 10.30-க்கும் 12.30-க்கும் இடைப்பட்ட சமயத்தில் ஆலுவா கொட்டாரக்கடவில் உள்ள திலீபின் வீட்டில் இந்த ஆலோசனை நடத்தியுள்ளதாகவும். அதில் முதல் குற்றவாளியாக கோபால கிருஷ்ணன் என்ற திலீப், இரண்டாம் குற்றவாளியாக திலீபின் சகோதரன் அனூப், திலீபின் மனைவியின் சகோதரன் சூரஜ் மூன்றாம் குற்றவாளி, அப்பு, பாபு செங்கமனாடு மற்றும் கண்டால் தெரியும் ஒருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ராஜா சாருக்கு இது தெரியாதா? இளையராஜாவை விமர்சிக்கும் சின்மயி

    நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் எட்டாம் பிரதியாக திலீப் சேர்க்கப்பட்டு கைது செய்து விசாரணை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த வேண்டும் என இவர்கள் ஆலோசனை நடத்தியதாக எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது. "என் மீது கை வைத்த எஸ்.பி சுதர்சனின் கையை வெட்ட வேண்டும்" என திலீப் கூறியதாகவும் எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் பாலச்சந்திர குமாரின் வாக்குமூலத்தின் அடிப்படையிலும், அவர் வெளியிட்ட ஆடியோவின் அடிப்படையிலும் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Malayalam actor

    அடுத்த செய்தி