Home /News /entertainment /

இரண்டு கோடி கடன் - குருதி ஆட்டம் படத்துக்கு எதிராக வழக்கு

இரண்டு கோடி கடன் - குருதி ஆட்டம் படத்துக்கு எதிராக வழக்கு

குருதி ஆட்டம்

குருதி ஆட்டம்

அதர்வா நடிப்பில் சமீபத்தில் வந்த படங்கள் எதுவும் சரியாகப் போகவில்லை. கடைசியாக வெளியான தள்ளிப்போகாதே படமும் அட்டர் பிளாப்பானது.

அதர்வா நடித்திருக்கும் குருதி ஆட்டம் படத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பாளர் வாங்கிய கடனுக்கு எதிராக இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது.

8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷின் இரண்டாவது படம் குருதி ஆட்டம். அதர்வா, ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளனர். படம் தயாராகி பல மாதங்களாகிறது. பலமுறை படவெளியீடு தள்ளிப்போய் இறுதியாக டிசம்பர் 24 வெளியாகும் என்றனர். ஆனால், வெளியாகவில்லை. இந்நிலையில் குருதி ஆட்டம் படத்துக்கு தடைகோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

குருதி ஆட்டம் படத்தை ராக்போர்ட் என்டர்டெயின்மெண்ட் சார்பாக முருகானந்தம் தயாரித்துள்ளார். இவரது முந்தைய படம் இரண்டாம் குத்து. இந்தப் படத்துக்கு வாங்கிய பைனான்ஸில் 2 கோடிகள் அவர் இன்னும் செட்டில் செய்யாமல் உள்ளார். இதனால் கடன் கொடுத்த பிளையிங் ஹார்ஸ் புரொடக்ஷன் பணத்தை செட்டில் செய்யும்வரை குருதி ஆட்டம் படத்தை வெளியிட தடைவிதிக்கக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளது.

அதர்வா நடிப்பில் சமீபத்தில் வந்த படங்கள் எதுவும் சரியாகப் போகவில்லை. கடைசியாக வெளியான தள்ளிப்போகாதே படமும் அட்டர் பிளாப்பானது. ஆக்ஷன் படமான குருதி ஆட்டத்தை தான் அவர் பெரிதும் நம்பிக் கொண்டிருந்தார். அந்தப் படம் வழக்கில் சிக்கியுள்ளது. தயாரிப்பாளர் இந்த கடன் பிரச்சனையை தீர்க்காதவரை குருதி ஆட்டம் வெளியாக வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Actor Atharvaa

அடுத்த செய்தி