Home /News /entertainment /

Varisu | பல கோடி ரூபாய் அளவிற்கு நடைபெறும் வாரிசு படத்தின் வியாபாரம்!

Varisu | பல கோடி ரூபாய் அளவிற்கு நடைபெறும் வாரிசு படத்தின் வியாபாரம்!

வாரிசு

வாரிசு

Varisu | வாரிசு திரைப்படத்தின் வியாபாரம் 280 கோடி ரூபாய் வரை நடைபெறும் என கூறப்படுகிறது. தொலைக்காட்சி, டிஜிட்டல், வெளிநாட்டு உரிமைகள் பெரும் தொகைக்கு விற்பனையாகியுள்ளன. 

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
வாரிசு திரைப்படத்தின் வியாபாரம் 280 கோடி ரூபாய் வரை நடைபெறும் என கூறப்படுகிறது. தொலைக்காட்சி, டிஜிட்டல், வெளிநாட்டு உரிமைகள் பெரும் தொகைக்கு விற்பனையாகியுள்ளன.

விஜய் நடிப்பில் வம்சி இயக்கம் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.  இந்தப் படத்திற்கான 70% காட்சிகளை இயக்குனர் படமாக்கி விட்டார். அடுத்த மாத இறுதிக்குள் வாரிசு திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடையும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் படத்தின் வியாபார பணிகளை தயாரிப்பாளர் தில் ராஜு தொடங்கியுள்ளார்.  அதில் முதல் கட்டமாக தொலைக்காட்சி உரிமம் மற்றும் டிஜிட்டல் உரிமம் உள்ளிட்டவற்றை முடித்தார்.

அதில் தொலைக்காட்சி உரிமைத்தை சன் தொலைக்காட்சி 50 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது.  அதேபோல் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் 60 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.

இதைத்தொடர்ந்து வெளிநாட்டு உரிமத்தை 32 கோடி ரூபாய்க்கு Phars Films நிறுவனமும், இந்தி டப்பிங் உரிமையை 32 கோடிக்கு Goldmines நிறுவனமும் கைபற்றியுள்ளது.

இதை தவிர T-Series நிறுவனம் இசை உரிமையை 10 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது.  இந்த ஐந்து உரிமை மூலம் மட்டுமே 184 கோடி ரூபாய் தயாரிப்பாளருக்கு கிடைத்துள்ளது.

Also read... ரூ. 6 கோடி செலவில் உருவாகும் படங்கள் சிறிய பட்ஜெட் படங்களாக கருதப்படும் - தயாரிப்பாளர் சங்கம், பெப்சி ஒப்பந்தம்!

இதை தவிர தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, இந்தி திரையரங்கு வியாபரங்கள் மீதம் உள்ளன. அதில் தமிழ்நாடு 65 கோடி, கேரளா 7 கோடி, கர்நாடகா 7 கோடி, ஆந்திரா - தெலங்கானா 20 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடைபெறலாம் என விநியோகஸ்தர் கார்த்திக் ரவிவர்மா கூறுகிறார்.

இதன் மூலம் குறைந்த பட்சம் 100 கோடி ரூபாய் கிடைக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார். இதனால் சுமார் 200 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்படும் வாரிசு படத்தின் மொத்த வியாபாரம் 270 இருந்து 280 கோடி ரூபாய் வரை தொடும் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Vijay, Entertainment

அடுத்த செய்தி