ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கட்டா குஸ்தி வியாபாரம் எவ்வளவு தெரியுமா? விஷ்ணு விஷால் ஓபன் டாக்

கட்டா குஸ்தி வியாபாரம் எவ்வளவு தெரியுமா? விஷ்ணு விஷால் ஓபன் டாக்

கட்டா குஸ்தி

கட்டா குஸ்தி

கடந்த வாரம் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

கட்டா குஸ்தி வியாபாரம் எவ்வளவு தெரியுமா? விஷ்ணு விஷால் ஓபன் டாக்கட்டா குஸ்தி திரைப்படத்தின் வியாபாரம் 30 கோடியை கடந்துள்ளது என நடிகரும்,  தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் அறிவித்துள்ளார்.

விஷ்ணு விஷால் தயாரித்து நடித்த கட்டா குஸ்தி திரைப்படத்தை செல்லா அய்யாவு என்பவர் இயக்கியிருந்தார். கடந்த வாரம் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.  இந்த நிலையில் பட வெற்றியை தொடர்ந்து குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அதில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, செல்லா அய்யாவு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அதில் பேசிய நடிகர் விஷ்ணு விஷால் தனக்கு வியாபாரம் இல்லை என்று ஒன்பது படங்கள் கைநழுவி சென்றன. ஆனால் தற்போது ஒன்பது படங்கள் கையில் இருக்கின்றன.

தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு பிளாக் மெயில்... பார்வதி நாயருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் உதவியாளர் கைது

விஷ்ணு விஷால் என்ற நடிகனை ஆதரிப்பதற்காகவே,  விஷ்ணு விஷால் என்ற தயாரிப்பாளர் உருவானான். நான் தயாரித்த எஃப்.ஐ.ஆர், கட்டா குஸ்தி ஆகிய திரைப்படங்கள் வெற்றியடைந்துள்ளன. இன்னும் வரும் திரைப்படங்களும் வெற்றியடையும்.  அதற்காக உழைத்துக் கொண்டிருப்பேன்.

எனக்கு வியாபாரம் இல்லை என்று ஒன்பது திரைப்படங்கள் கைநழுவி சென்றன.  ஆனால் இன்று கட்டா குஸ்தி திரைப்படம் இதுவரை மட்டும் அனைத்து வகையான வியாபாரத்தில் 30 கோடி ரூபாயை கடந்துள்ளது.  இதற்கு இன்னும் வியாபாரம் உள்ளது என தெரிவித்தார். இதனால் தற்போது ஒன்பது திரைப்படங்கள் கையில் உள்ளன. இது மகிழ்ச்சியாக உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

படத்தின் நாயகி ஐஸ்வர்யா லட்சுமி பேசுகையில், இந்த வருடம் பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி ஆகிய படங்கள் எனக்கு வெற்றியை கொடுத்துள்ளன.

மாடர்ன் ட்ரெஸில் மிருணாள் தாகூரின் கலக்கல் போட்டோஷூட்

இந்த கதாபாத்திரத்திற்கு நான் பொருத்தமாக இருப்பேனா என ஆரம்பத்தில் சந்தேகம் இருந்தது. ஆனால் என்னுடைய மேலாளர் தங்கதுரைதான் இந்தப் படம் நன்றாக இருக்கும் உனக்கு, நிச்சயம் நடிக்கலாம் என்று கூறினார். அது தற்போது நடந்துள்ளது என தெரிவித்தார்.

First published:

Tags: Actor Vishnu Vishal, Tamil Cinema