தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் ஆன எம்.கே தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாறு இணைய தொடராக உருவாக உள்ளது.
தமிழ் சினிமாவில் 1934 ஆம் ஆண்டு முதல் 1952 ஆம் ஆண்டு வரை பிஸியாக இருந்த நடிகர் எம்.கே தியாகராஜ பாகவதர். பன் திறமை கொண்ட இவர், ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்பட்டார். இதன் மூலம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்ற பெயரும் அவருக்கு உள்ளது.
புகழின் உச்சியில் இருந்த சமயத்தில் கொலை வழக்கு ஒன்றில் கைதாகி சிறை சென்றார். திரைத்துறையில் புகழின் உச்சத்துக்கு சென்று இறுதியில் சர்ச்சைகளை சந்தித்து எம்.கே. தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை தற்போது இணைய தொடராக உருவாக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
அந்தத் தொடரை கேளடி கண்மணி, ஆசை உள்ளிட்ட படங்களை இயக்கிய வசந்த் இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகளின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
பல வெற்றிக்களுக்கும், சர்ச்சைகளுக்கும் பெயர் போன பாகவதர் வாழ்க்கையை முழுமையாக ஆராய்ந்து படமாக்க வசந்த் திட்டமிட்டிருக்கிறார். பாகவதர் நடிப்பில் வெளியான பல படங்கள் வெற்றியடைந்தன. குறிப்பாக பவளக்கொடி சத்தியசீலன் ஹரிதாஸ் உள்ளிட்ட படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. மேலும் இவர் பாடிய ஏராளமான பாடல்களும் ரசிகர்களை கவர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.