Home /News /entertainment /

வித்தியாசமான கதைகளத்தில் சிருஷ்டி டாங்கே - ஸ்ரீகாந்த் நடிக்கும் தி பெட்!

வித்தியாசமான கதைகளத்தில் சிருஷ்டி டாங்கே - ஸ்ரீகாந்த் நடிக்கும் தி பெட்!

சிருஷ்டி - ஸ்ரீகாந்த்

சிருஷ்டி - ஸ்ரீகாந்த்

நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்திருக்கும் இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக முக்கியமான வேடத்தில் ஜான் விஜய் நடித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
ஸ்ரீகாந்த், சிருஷ்டி டாங்கே நடிப்பில் உருவாகியிருக்கும் த்ரில்லர் படத்துக்கு தி பெட் என்று பெயர் வைத்துள்ளனர். மணிபாரதி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

தி பெட் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர். ஐடியில் வேலை பார்க்கும் ஸ்ரீகாந்த் தனது நண்பர்களுடன் ஊட்டிக்கு பிக்னிக் செல்கிறார். அங்கு ஒரு கொலை நடக்கிறது. அதனைத் தொடர்ந்து அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்தான் படத்தின் கதை. நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்திருக்கும் இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக முக்கியமான வேடத்தில் ஜான் விஜய் நடித்துள்ளார்.

மேலும் பிளாக் பாண்டி, தேவிப்ரியா, திவ்யா, ரிஷி, திருச்சி சாதனா, விக்ரம் ஆனந்த், பிரவீண் குமார் என பலர் நடித்துள்ளனர். ஸ்ரீநிதி புரோடக்ஷன்ஸ் சார்பில் விஜயகுமார், லோகேஸ்வரி விஜயகுமார் படத்தை தயாரித்துள்ளனர்.

சரி, படத்துக்கு ஏன் தி பெட் என தலைப்பு? இதற்கு பதிலளித்த இயக்குனர் மணிபாரதி, "பொதுவாக ஹீரோ, ஹீரோயின் அல்லது படத்தில் வரும் ஏதாவது கதாபாத்திரத்தின் பார்வையில் படத்தின் கதையை விவரிப்பது போல் தான் எடுப்பார்கள். இந்தப் படத்தில் முதல்முறையாக காட்டேஜ் ஒன்றில் இருக்கும் படுக்கை தனது பார்வையில் தன்னைத் தேடி வந்த மனிதர்களின் கதையை விவரிப்பது போல் எடுத்திருக்கிறோம். அதனால் அதற்குப் பொருத்தமாக படத்துக்கு தி பெட் என பெயர் வைத்துள்ளோம்" என்றார்.

The Bed starring Srushti Dange in a different story, srushti dange, srushti dange movies, srushti dange  the bed, srushti dange srikanth, சிருஷ்டி டாங்கே, சிருஷ்டி டாங்கே ஸ்ரீகாந்த், தி பெட்

ரசிகர்களை திரையரங்குக்கு இழுத்துவர படத்தின் டைட்டிலில் இருந்தே இயக்குனர்கள் வித்தியாசமாக யோசிக்க வேண்டியிருக்கிறது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Tamil Cinema

அடுத்த செய்தி