Home /News /entertainment /

தமிழில் வெளியாகும் தி பேட்மேன் - ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழில் வெளியாகும் தி பேட்மேன் - ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தி பேட்மேன்

தி பேட்மேன்

ஸ்பைடர் மேனுக்கு இணையாக ரசிக்கப்படும் மற்றொரு சூப்பர்ஹீரோ பேட்மேன். டிசி காமிக்ஸின் பேட்மேன் கதாபாத்திரத்தை வைத்து பல படங்கள் வந்துள்ளன.

  • News18
  • Last Updated :
தி பேட்மேன் திரைப்படம் இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய  மொழிகளில் வெளியாகிறது.

சூப்பர் ஹீரோ திரைப்படங்களுக்கு உலக அளவில் சந்தை உள்ளது. இந்தியாவிலும் இவ்வகைப் படங்கள் கணிசமாக வசூலிக்கின்றன. சென்ற மாதம் வெளியான ஸ்பைடர் மேன்:  நோ வே ஹோம் இந்தியாவில் வரிகள் போக 200 கோடிகளுக்கு மேல் வசூலித்தது.

ஸ்பைடர் மேனுக்கு இணையாக ரசிக்கப்படும் மற்றொரு சூப்பர்ஹீரோ பேட்மேன். டிசி காமிக்ஸின் பேட்மேன் கதாபாத்திரத்தை வைத்து பல படங்கள் வந்துள்ளன. அதில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய பேட்மேன் பிகின்ஸ், தி டார்க் நைட், தி டார்க் நைட் ரைசஸ் திரைப்படங்கள் முக்கியமானவை. இவ்வகை படங்களுக்கு பெரிய அளவில் கதைகள் இருப்பதில்லை. எடுத்த கதையையே பட்டி டிங்கரிங் செய்து ரீபூட் என்று மறுபடியும் எடுப்பார்கள். இந்த தி பேட்மேன் படமும் அப்படித்தான் எடுக்கப்பட்டுள்ளது.

இதில் பேட்மேனாக முதல்முறையாக ராபர்ட் பேட்டின்சன் நடித்துள்ளார். இவர் டுவைலைட் படத்தின் மூலம் பிரபலமானவர். பேட்மேன் என்றால் கிறிஸ்டியன் பேல்தான் நினைவுக்கு வருவார். அவர் பேட்மேனாக நடிப்பதை தவிர்த்த பின் கடும் சர்ச்சைக்கு நடுவில் பென் அஃப்லெக் பேட்மேனாக நடித்தார். அவர்தான் இந்தப் படத்தையும் எழுதி, இயக்கி, நடிப்பதாக இருந்தது. முதலில் இயக்கத்திலிருந்து விலகியவர் பிறகு ஒட்டு மொத்தமாக படத்திலிருந்து விலக, தி பேட்மேனை மேட் ரீவ்ஸ் இயக்குவதாக முடிவானது. பேட்மேனாக நடிக்க ராபர்ட் பேட்டின்சனை தேர்வு செய்தனர்.

Also read... ஆஸ்கர் வென்ற Bong Joon Ho இயக்கத்தில் நடிக்கும் ராபர்ட் பேட்டின்சன்!

இந்த புதிய பேட்மேன் திரைப்படம் மார்ச் 4 ஆம் தேதி வெளியாகிறது. அதேநாள் படத்தை இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியிடுகின்றனர். மார்வெலின் சூப்பர் ஹீரோக்களுக்கு போட்டியாக டிசியின் இந்த சூப்பர் ஹீரோ என்ன வசூலிக்கப் போகிறார் என்பதைப் பார்க்க உலகமே ஆவலாக உள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment

அடுத்த செய்தி