ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

திரையரங்கை விட ஓடிடியில் அதிகம் லாபம் பார்க்கும் தயாரிப்பாளர்கள்!

திரையரங்கை விட ஓடிடியில் அதிகம் லாபம் பார்க்கும் தயாரிப்பாளர்கள்!

ஓ.டி.டி

ஓ.டி.டி

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இந்த ஓ.டி.டி வியபாரம் அனைத்து படங்களுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தால் இந்த துறை இன்னும் வளர்ச்சியடையும் என தெரிவிக்கின்றனர்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ் சினிமாவிற்கு ஓ.டி.டி வருகை திரையரங்கு வியாபாரத்தை காட்டிலும், தயாரிப்பாளர்களுக்கு மிகவும் உதவிகரமாக மாறியுள்ளது. அதே சமயம் அந்த பலன் குறிப்பிட்ட சில படங்களுக்கு மட்டுமே கிடைக்கிறது என கூறப்படுகிறது. 

திரைத்துறையில் ஒரு படத்தின் வியாபாரம் ஆரம்ப காலகட்டத்தில் திரையரங்கை மட்டுமே சார்ந்திருந்தது. அப்போது நடிகர்கள் சம்பளம், பட்ஜெட் என அனைத்தும் அந்த வியபாரத்தை மையமக கொண்டே நிர்ணயம் செய்யப்பட்டது.

அதன்பின் தொலைக்காட்சிகளின் வளர்ச்சி சினிமா வியாபாரத்தில் முக்கிய பங்காற்ற தொடங்கியது. திரையரங்கில் வெளியான ஒரு படத்தை, குறிப்பிட்ட வருடங்களுக்கு பிறகு தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தயாரிப்பாளர்கள் படத்திற்கு ஏற்றவாறு பணத்தை பெற்றுகொண்டு உரிமையை கொடுத்தனர்.

திரையரங்கம், தொலைக்காட்சி உரிமையகளை மட்டுமே தயாரிப்பாளர்கள் நம்பியிருந்தனர். அந்த நிலையில் தான் ஓ.டி.டி வருகை அவர்களுக்கு மேலும் ஒரு வியாபாரத்தை கொடுத்தது. ஆரம்பத்தில் திரையரங்கு வெளியீட்டுக்கு பிந்தையை ஓ.டி.டி உரிமையை சில கோடிகள் கொடுத்து வாங்கினர். ஆனால் அது நட்சத்திர அந்தஸ்து கொண்ட நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் படங்களுக்கு மட்டுமே கிடைத்தது. அந்த வகையிலேயே படங்களை நான்கு ஆண்டுகளாக ஓ.டி.டி நிறுவனங்கள் வாங்கி வந்தன.

கொரோனா ஊரடங்கு சமயத்தில் ஓ.டி.டி என்ற முறை பிரபலமானது. அதுவும் திரையரங்குகள் மூடப்பட்டதால், வெளியீட்டுக்கு தயாராக இருந்த படங்களை நேரடியாக தங்கள் தளத்தில் வெளியிட ஓ.டி.டி. நிறுவனங்கள் முயற்சித்தன. அந்த வகையில் சூர்யா தயாரித்த பொன்மகள் வந்தால், சூரரைப் போற்று, ஜெய்பீம் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்த பென்குயின் உள்ளிட்ட 12 படங்கள் நேரடியாக ஓ.டி.டியில் வெளியாகின. இதனால் ரசிகர்களுக்கு ஓ.டி.டி அதிக அளவில் பரீட்சியமானது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓ.டி.டி. மேலும் வளர்ச்சியடைந்துள்ளது. முன்னணி நடிகர்களின் படங்கள் திரையரங்கு வெளியீட்டுக்கு பிந்தயை உரிமை நினைத்தும் பார்க்க முடியாத அளவிற்கு விற்கப்படுகிறது. குறிப்பாக சம்மந்தப்பட்ட திரைப்படத்தின் பட்ஜெட்டில் குறைந்தப்பட்சம் 50 முதல் 60% வரை ஓ.டி.டியில் திரும்பி எடுக்கப்படுகிறது. இது தமிழக திரையரங்குகள் மூலம் கிடைக்கும் வருவாயை விட அதிகம் என திரைத்துறையில் கூறுகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி சில படங்கள் ஓ.டி.டி, தொலைக்காட்சி உரிமை, இந்தி டப்பிங் உரிமைகள் மூலமே முதலீட்டை திரும்ப எடுத்துவிடுகின்றனர். திரையரங்க வியபாரம் முழுக்க முழுக்க லாபமாக அமைகின்றன எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

Also read... WATCH: காதோடு சொல்... காதோடு சொல்... வெளியானது பாடல் வீடியோ!

இந்த ஓ.டி.டி வியாபாரம் முன்னணி நடிகர்களின் படங்களுக்கும், அவர்கள் வைத்துள்ள தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கும் படங்களுக்கும், ஒரு சில முன்னணி தயாரிப்பாளர்களின் படங்களுக்கு மட்டுமே கிடைக்கிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இந்த ஓ.டி.டி வியபாரம் அனைத்து படங்களுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தால் இந்த துறை இன்னும் வளர்ச்சியடையும் என தெரிவிக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: OTT Release, Tamil cinema Producer council, Tamil movies