விஜய் பங்கேற்கும் ஒவ்வொரு இசை வெளியீட்டு விழாவும் கவனம் ஈர்த்துவரும் நிலையில், இன்று நடைபெறும் வாரிசு பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையன்று வெளியாக உள்ளது. தமன் இசையில் உருவாகி உள்ள இந்தப் படத்தின் பாடல்கள், 24ஆம் தேதியான இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் வெளியிடப்பட உள்ளது.
பொதுவாக, தன்னைச் சுற்றி நடைபெறும் அரசியல் அத்தனைக்கும் விஜய் பதிலளிக்கும் மேடையாக அவரது இசை வெளியீட்டு விழாக்கள் பார்க்கப்படுகின்றன. சர்க்கார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது, விஜயின் அரசியல் ஆசை அனைத்தையும் வெளிப்படுத்தினார்.
முதலமைச்சராக சர்க்கார் திரைப்படத்தில் நடித்துள்ளீர்களா என்ற கேள்விக்கு முதலமைச்சரானால் ஒருபோதும் நடிக்க மாட்டேன் என கூறி ரசிகர்களை உற்சாகமடையச் செய்த விஜய், அதே மேடையில், பிரச்சாரம் செய்து சர்க்கார் அமைப்பார்கள்; நாங்கள் சர்க்கார் அமைத்து பிரச்சாரம் செய்கிறோம் என பேசி ரசிகர்களை மேலும் முறுக்கேற்றினார்.
சர்க்கார் திரைப்படம் வெளியானபோது பேனர் கிழிப்பு, ரசிகர்கள் மீது தாக்குதல் உள்ளிட்ட துர்சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், இவை அத்தனைக்கும் பதில் சொல்லும் விதமாக அடுத்த படமான பிகில் மேடையை பயன்படுத்திக் கொண்டார் விஜய். பிகில் இசை வெளியீட்டு விழாவில் எனது பேனரைக் கிழியுங்கள், என் ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள் என பேசி அதிர்வலை ஏற்படுத்தினார்.
Also read... மிஷ்கின் முதல் கௌதம் கார்த்தி வரை பிரபலங்கள் சூழ நடைபெற்ற ஆர்.கே.சுரேஷ் மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சி!
இவ்வாறாக தன்னை சுற்றி நடக்கும் அனைத்து நிகழ்விற்கும் இசை வெளியீட்டு விழாக்களின் மேடைகளிலேயே விஜய் பதில் அளித்து வந்தார். மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது வருமானவரித்துறை சோதனைக்காக பாதியிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது குறித்து அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுகுறித்து பேசாமல் தீனா உள்ளிட்ட பிற நடிகர்களை இதுகுறித்து பேச அனுமதித்தார்.
இந்நிலையில், வாரிசு திரைப்படத்திற்கு திரையரங்குகள் ஒதுக்குவதில் உள்ள சிக்கல், வாரிசு - துணிவு திரைப்படங்களின் மோதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மையப்படுத்தி விஜயின் பேச்சு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Vijay, Varisu