• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ப்ளூ சட்டை மாறனின் ஆன்டி இன்டியன் ரிலீஸ் எப்போது?

ப்ளூ சட்டை மாறனின் ஆன்டி இன்டியன் ரிலீஸ் எப்போது?

ஆன்டி இன்டியன்

ஆன்டி இன்டியன்

ப்ளூ சட்டை மாறனின் இரண்டு நிமிட திரைப்பட விமர்சனங்களை விரும்புகிறவர்களுக்கு; இந்த இரண்டு மணி நேர விமர்சனம் பிடிக்க வாய்ப்பிருக்கிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ப்ளூ சட்டை மாறன் என்கிற இளமாறன் இயக்கி நடித்திருக்கும் ஆன்டி இன்டியன் திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் என்பதை மறுபடி உறுதி செய்துள்ளார். பட வெளியீடு எப்போது என்பதையும் அறிவித்துள்ளனர். 

தமிழில் வெளியாகிற பத்தில் ஒன்பதரை படங்களை கழுவி ஊற்றுகிறவர் ப்ளூ சட்டை மாறன். இவரை சினிமா விழாக்களில் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் வெளிப்படையாக கடுமையான மொழியில் விமர்சித்திருக்கிறார்கள். பிறகு திரைப்படங்களில் ப்ளூ சட்டை மாறனைப் போல் கதாபாத்திரம் வைத்து கலாய்த்தார்கள். அந்தளவு படமெடுத்தவர்களை பாடாய்படுத்தியவர். இவரது வீடியோவுக்கு கீழே, 'நீ மட்டும் படம் எடுத்தா செத்தடா' என்று கமெண்ட் போடாதவர்கள் குறைவு. அதனை ஒரு சவாலாகவே ஏற்று ஆன்டி இன்டியன் என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார் ப்ளூ சட்டை.

எப்படியும் படத்தையும், தன்னையும் கழுவி ஊற்றுவார்கள் என்பது தெரிந்ததால், மற்றவர்களை முந்திக் கொண்டு அவரே தன்னை கலாயக்க ஆரம்பித்தார். படத்தில் பாட்ஷா என்ற வேடத்தில் இவர் வருகிறார். இறந்து போகும் இவரை எரிப்பதா, புதைப்பதா என்று இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆளாளுக்கு அடித்துக் கொள்வதுதான் படமாம். பர்ஸ்ட் லுக்கில் தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டரை இடம்பெறச் செய்தவர், ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டருக்கு மாலையிட்டு மலர்தூவி, 'இதைவிட எவன்டா என்னை கலாய்க்கப் போறது' என்று சவால்விட்டிருக்கிறார்

Also read... யுத்த காண்டம் - இந்தியாவின் முதல் சிங்கிள் ஷாட் திரைப்படம்!

ஆன்டி இன்டியனை திரையரங்கில் வெளியிடக் கூடாது என்று ஒருசில திரையரங்கு உரிமையாளர்களே இறங்கி வேலை செய்கிறார்கள். படம் திரையரங்கா இல்லை ஓடிடியா என சந்தேகம் நிலவிய போது, கண்டிப்பா திரையரங்குதான் என்றார் ப்ளூ சட்டை மாறன். இப்போது டிசம்பரில் படம் திரையரங்கில் வெளியாகும் என்று திரையரங்கு வெளியீட்டை மறுபடி உறுதி செய்துள்ளார்

ப்ளூ சட்டை மாறனின் இரண்டு நிமிட திரைப்பட விமர்சனங்களை விரும்புகிறவர்களுக்கு; இந்த இரண்டு மணி நேர விமர்சனம் பிடிக்க வாய்ப்பிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: