நிழல் இதழும், பதியம் அமைப்பும் இணைந்து தமிழகம், புதுச்சேரியில் பல வருடங்களாக குறும்பட பயிற்சிப் பட்டறையை நடத்தி வருகின்றன. அதன் 60 வது குறும்பட பயிற்சிப் பட்டறை சென்னையில் இந்த மாதம் நடக்கிறது.
சென்னைக்கு வெளியே உள்ளவர்கள், திரைப்பட ஆர்வம் இருந்தும் அதற்கான வழிமுறைகள் அறியாதவர்கள், திரைத்துறை சாராத தொழில்கள், வேலையில் இருப்பவர்கள் ஆனால் சினிமா தொழில்நுட்பம் கற்க ஆர்வம் உள்ளவர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் வடிகாலாக நிழல், பதியம் நடத்தும் குறும்பட பயிற்சிப் பட்டறை உள்ளது.
ஆறு தினங்கள் நடக்கும் இந்தப் பயிற்சியில் திரைக்கதை, ஒப்பனை, நடிப்பு, கேமரா, இயக்கம், எடிட்டிங் என அனைத்தும் கற்றுத் தரப்படும்.
பயிற்சியின் முடிவில் மாணவர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அவர்களே குறும்படம் ஒன்றை இயக்கி, எடிட் செய்ய வசதி செய்துத் தரப்படும். இந்தப் பயிற்சிப் பட்டறைகளில் மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் தொடர்ச்சியாக கலந்து கொண்டு வந்திருக்கிறார். சீனு ராமசாமி, ராம், செழியன் போன்ற அனுபவம் வாய்ந்த இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், எடிட்டர்கள் சினிமா குறித்து கற்பித்திருக்கிறார்கள்.
60 வது குறும்பட பயிற்சிப் பட்டறை டிசம்பர் 25 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதிவரை சென்னை வேளச்சேரியில் நடக்கிறது. தங்குமிடம், உணவு இரண்டும் ஏற்பாடு செய்துத் தரப்படும். இதற்கும் பயிற்சிக்கும் சேர்த்து குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது.
Also read... ‘இஷ்டம் இல்லன்னா வெளிய போ, வாயை மூடு, மக்கள் காப்பாத்துவாங்க - தாமரை, பிரியங்கா காரசாரமான மோதல்!
இந்தப் பயிற்சிப் பட்டறையில் இருந்து வந்தவர்கள்தான் இந்த வருடம் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கூழாங்கல் படத்தின் ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டர் என்பது முக்கியமானது. பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் மேலதிக தகவல்களுக்கு 9003144868 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.