ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் ஒரு பார்வை!

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் ஒரு பார்வை!

சிவகுமாரின் சபதம்

சிவகுமாரின் சபதம்

தமிழ்ப் படங்களைவிட இந்த வாரம் அதிகம் எதிர்பார்க்கிற திரைப்படம் ஜேம்ஸ்பாண்டின் நோ டைம் டூ டை.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

இந்த வாரம் தமிழகத்தில் வெளியாகும் முக்கிய மூன்று படங்கள் ருத்ர தாண்டவம், சிவகுமாரின் சபதம், நோ டைம் டூ டை.

சிவகுமாரின் சபதம் திரைப்படத்தை எழுதி இயக்கி இசையமைத்து நடித்து இயக்கியிருக்கிறார் ஹிப் ஹாப் ஆதி. இன்றைய இளம் தலைமுறையை கவர்வதற்குரிய கச்சாப்பொருளுடன் சிவகுமாரின் சபதம் தயாராகியுள்ளது.

சமூக அக்கறை இல்லை என்று சொல்லக் கூடாது என்பதற்காக நெசவாளர்களின் வாழ்க்கையை, அவர்கள் துயர்களை இரண்டாம் பாதியில் சேர்த்துள்ளனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்திருக்கும் இப்படம் இந்த வாரம் வெளியாகிறது. ஓடும் நேரம் 2 மணி 18 நிமிடங்கள்.

திரௌபதி படத்தை இயக்கிய மோகன் ஜி. யின் அடுத்தப் படம் ருத்ர தாண்டவம். மத மாற்றத்தை பின்னணியாக வைத்து இந்து என்ற உணர்வை தூண்டும்வகையில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. கதை, வசனம், காட்சி என அனைத்திலும் சர்ச்சைக்குரிய அம்சங்கள் நிறைந்துள்ளன. சர்ச்சையாகும், பேசப்படம், அதே வேகத்தில் மறக்கப்படும். இதன் ரன்னிங் டைம் 2 மணி 48 நிமிடங்கள்.

Also read... 6 மொழிகளில் வெளியாகும் மாதவனின் ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட்!

தமிழ்ப் படங்களைவிட இந்த வாரம் அதிகம் எதிர்பார்க்கிற திரைப்படம் ஜேம்ஸ்பாண்டின் நோ டைம் டூ டை. செப்டம்பர் 30 படம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தமிழ்நாட்டில் வெளியாகிறது. இதன் ட்ரெய்லர்கள் மூலம் சண்டைக் காட்சிகள் ஏற்படுத்திய வியப்பு, படம் பாக்ஸ் ஆபிஸில் அதிகம் அறுவடை செய்யும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதன் நீளம் 2 மணி 43 நிமிடங்கள்.

இவை தவிர உதிரியாக சில படங்களும் வெளியாகின்றன. அவை சில காட்சிகளாவது தாக்குப் பிடிக்குமா என்பது சந்தேகமே.

First published:

Tags: Theatre