• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • No Time To Die வசூல் வேட்டையை நிகழ்த்துமா?

No Time To Die வசூல் வேட்டையை நிகழ்த்துமா?

நோ டைம் டூ டைய்

நோ டைம் டூ டைய்

இதற்குமுன் வெளியான ஸ்பெக்டர் முதல்வார இறுதியில் சர்வதேச அளவில்123 மில்லியன் டாலர்களை வசூலித்தது. அதற்கு முந்தைய ஸ்கைஃபால் 109 மில்லியன் டாலர்களை வசூலித்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
25 வது ஜேம்ஸ்பாண்ட் படமான நோ டைம் டூ டை இன்று 50 நாடுகளில் வெளியாகியுள்ளது. முதல் மூன்று தினங்களில் மொத்தம் 90 மில்லியன் டாலர்களை படம் வசூலிக்கும் என எதிர்பார்க்கிறார்கள். 

இதற்குமுன் வெளியான ஸ்பெக்டர் முதல்வார இறுதியில் சர்வதேச அளவில்123 மில்லியன் டாலர்களை வசூலித்தது. அதற்கு முந்தைய ஸ்கைஃபால் 109 மில்லியன் டாலர்களை வசூலித்தது. நோ டைம் டூ டை படத்துக்கு முந்தையப் படங்களைவிட குறைவான டார்கெட் நிர்ணயித்திருப்பதற்குக் காரணம், பல நாடுகளில் இன்னும் கொரோனா ஊரடங்கு முற்றிலும் விலக்கிக் கொள்ளப்படவில்லை. ரசிகர்களும் முழுமையாக திரையரங்குக்கு வர தயாராகவில்லை

இன்று 30 ஆம் தேதி பிரான்ஸ், ரஷ்யா போன்ற முக்கியமான பல நாடுகளில் படம் வெளியாகவில்லை. அக்டோபர் முதல்வாரமே இங்கு படம் வெளியாகிறது. அதேபோல் அக்டோபர் 8 யுஎஸ்ஸிலும், அக்டோபர் 29 சீனாவிலும் நோ டைம் டூ டை வெளியாகிறது

படம் குறித்து இதுவரை நேர்மறை விமர்சனங்களே வந்துள்ளன. ஸ்கைஃபால், ஸ்பெக்டர் படங்களை சேம் மெண்டஸ் இயக்கியிருந்தார். அவர் அமெரிக்கன் பியூட்டி போன்ற படங்களை இயக்கியவர். ஆக்ஷனைவிட உணர்வுப்பூர்வமான விஷயங்களுக்கு அவர் அதிகம் இடம்கொடுத்ததால் ஸ்கைஃபாலும், ஸ்பெக்டரும் ஹார்ட்கோர் ஜேம்ஸ்பாண்ட் ரசிகர்களுக்குப் பிடிக்காமல் போனது.

Also read... கோமாளி பட இயக்குனரின் அடுத்தப்பட ஹீரோ யார் தெரியுமா?

இதில் பழைய ஜேம்ஸ்பாண்ட் திரும்ப வந்துள்ளார், ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி காட்டியுள்ளார் என விமர்சகர்கள் எழுதியுள்ளனர். டேனியல் க்ரேக்கை ஜேம்ஸ்பாண்டாக அறிமுகப்படுத்திய போது, அவர் இந்த வேடத்துக்கு பொருத்தமில்லை என வசைமாரி பொழிந்தனர். அதனை கேஸினோ ராயல் படத்திலேயே துடைத்தெறிந்தார் டேனியல் க்ரேக். ஷான் கானரிக்குப் பிறகு ஜேம்ஸ்பாண்ட் என்றால் அது டேனியல் க்ரேக்தான் என்று சொல்ல வைத்திருக்கிறார். அவர் ஜேம்ஸ்பாண்டாக நடிக்கும் கடைசிப்படம் இது

விமர்சகர்களின் எதிர்பார்ப்பை தகர்த்து மற்ற ஜேம்ஸ்பாண்ட் படங்களின் வசூலை பின்னுக்குத் தள்ளி நோ டைம் டூ டை வசூல் சாதனைப் படைக்கும் என்றே தோன்றுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: