முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / WATCH: டாடா படத்திலிருந்து வெளியானது ’தாயாக நான்’ வீடியோ சாங்!

WATCH: டாடா படத்திலிருந்து வெளியானது ’தாயாக நான்’ வீடியோ சாங்!

’தாயாக நான்’  வீடியோ சாங்

’தாயாக நான்’  வீடியோ சாங்

Thayaga Naan - Video Song | நடிகர் கவின் நடிப்பில் வெளியாகி உள்ள ‘டாடா’ படத்திலிருந்து  ’தாயாக நான்’ பாடலின் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. 

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சின்னத்திரை சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகர் கவின். இதையடுத்து படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், 'நட்புன்னா என்னானு தெரியுமா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். அந்த படம் பெரிய அளவில் பேசப்படவில்லை. அதனை தொடர்ந்து கவின் லிஃப்ட் என்ற படத்தில் நடித்தார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது கணேஷ் கே.பாபு இயக்கத்தில் நடிகர் கவின், அபர்ணா தாஸ் நடிப்பில் கடந்த 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் பாக்யராஜ், விடிவி கணேஷ் ஐஸ்வர்யா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். வித்தியாசமான கதையை கொண்ட இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ’தாயாக நான்’ என்ற பாடலின் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

' isDesktop="true" id="897642" youtubeid="EErYhzGH_Ag" category="cinema">

நன்றி: Think Music India.

First published:

Tags: Movie Video Songs