எனக்கும், கமலுக்கும் எத்தனை கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் தசாவதாரம் போன்ற இன்னொரு படத்தை மீண்டும் உருவாக்க முடியாது என்று தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனரான கே.எஸ். ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
உலக நாயகன் கமல் நடிப்பில், கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் தசாவதாரம் திரைப்படம் கடந்த 2008-ல் வெளியானது.
இந்த படத்தில் ரங்கராஜ நம்பி, கோவிந்த் ராமசாமி, கிறிஸ்டியன் ஃப்ளெட்சர், பல்ராம் நாயுடு, கிருஷ்ணவேணி, வின்சென்ட் பூவராகவன், அவதார் சிங், கலிஃபுல்லா கான், ஷிங்கென் நரஹஷி, ஜார்ஜ் புஷ் என 10 கேரக்டரில் கமல் நடித்து அசத்தியிருப்பார்.
இதையும் படிங்க - ஜெய்பீம் இயக்குனர் ஞானவேலுடன் மீண்டும் இணையும் சூர்யா...
சுமார் ரூ. 60 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட தசாவதாரம், ரூ. 220 – கோடிக்கும் அதிகமாக வசூலித்து, சினிமா வர்த்தக வல்லுனர்களை வியப்பில் ஆழ்த்தியது. படத்தில் கமலுடன் அசின், நெப்போலியன், மல்லிகா ஷெராவத் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
கதையை கமல், கிரேஸிமோகன், சுஜாதா இணைந்து எழுத, திரைக்கதையை கமல் மட்டுமே வடிவமைத்தார். படத்தின் வசனங்களும் கமலின் கைவண்ணத்தில் உருவானது. பல்வேறு கால கட்டங்களில் நடைபெற்ற சம்பவங்களை ஸ்ரீகர் பிரசாத் மிக அருமையாக எடிட்டிங் செய்து வழங்கியிருப்பார்.
இதையும் படிங்க - வசூலில் அமீர் கானின் தங்கல் சாதனையை முறியடித்தது கே.ஜி.எஃப். 2... பாகுபலி 2 வசூலை முந்துமா?
கமலின் திரையுலக வரலாற்றில் மிக முக்கியமான 10 படங்கள் இருக்கும் என்றால் அதில் ஒன்றாக தசாவதாரம் இருக்கும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.
தசாவதாரம் ட்ரய்லரைப் பார்க்க...
இந்தப் படத்தை பொருத்தவரையில் அடுத்த பாகத்தை இயக்குவதற்கான கதையம்சம் கொண்டுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கே.எஸ். ரவிக்குமாரிடம், தசாவதாரம் 2 திரைப்படம் உருவாக்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரவிக்குமார், தனக்கும் கமலுக்கும் கோடிக்கணக்கில் பணம் கொட்டிக் கொடுத்தாலும் தசாவதாராம் போன்ற இன்னொரு படத்தை மீண்டும் உருவாக்க முடியாது என்று பதில் அளித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.