முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ரஜினியின் ஜெயிலர் படத்தில் கேங்ஸ்டராக நடிக்கும் வசந்த் ரவி…

ரஜினியின் ஜெயிலர் படத்தில் கேங்ஸ்டராக நடிக்கும் வசந்த் ரவி…

ரஜினிகாந்த் - வசந்த் ரவி

ரஜினிகாந்த் - வசந்த் ரவி

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஜெயிலர் படத்தை பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கவுள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ரஜினி நடிப்பில் உருவாகள்ள ஜெயிலர் படத்தில், கேங்ஸ்டர் கேரக்டரில் இளம் நடிகர் வசந்த் ரவி நடிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வசந்த் ரவி நடிப்பில் ஏற்கெனவே வெளிவந்த தரமணி மற்றும் ராக்கி படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிப்பில் தனக்கென ஒரு ஸ்டைலை பின்பற்றிவரும், வசந்திற்கென தனி ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஜெயிலர் படத்தில் அவர் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார்.

சிறை அதிகாரியாக ரஜினி இடம்பெறும் இந்தப்படத்தில், கன்னட சூப்பர் ஸ்டார் சிவகுமார், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் இடம் பெறுகின்றனர். ஜெயிலர் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பார் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஜீ தமிழுக்கு தாவும் பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி...

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கவுள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அங்கு சினிமா தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருவதால், படப்பிடிப்பை வேறு தளத்தில் தொடங்க ஜெயிலர் படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

பெயரை மாற்றிய ஷ்ரத்தா ஸ்ரீநாத்... புதிய பெயர் என்ன தெரியுமா?

தற்போதைய தகவலின்படி ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் நடைபெற்றுவரும் வேலைநிறுத்தப் போராட்டம், குறைந்தது 3 வாரங்கள் முதல் அதிகபட்சமாக 3 மாதங்கள் வரை நீடிக்க வாய்ப்புள்ளது.

ஜெயிலர் படத்தின் பூஜை இந்த வாரம் நடைபெறலாம். படப்பிடிப்பை இம் மாதம் 3வது வாரத்தில் இருந்து தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்கள்.

First published:

Tags: Nelson dilipkumar, Rajinikanth