Home /News /entertainment /

1000 நாட்களைக் கடந்த தஞ்சை தளபதி விஜய் விலையில்லா விருந்தகம்!

1000 நாட்களைக் கடந்த தஞ்சை தளபதி விஜய் விலையில்லா விருந்தகம்!

விஜய் விலையில்லா விருந்தகம்

விஜய் விலையில்லா விருந்தகம்

தஞ்சை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் நடத்தி வரும் விலையில்லா விருந்தகத்தின் சேவை 1000 நாட்களைக் கடந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தஞ்சை மாவட்ட தளபதி விஜய் ரசிகர்கள் சார்பில் நடத்தப்பட்டு வரும் விலையில்லா விருந்தகம் 1000 நாட்களைக் கடந்துள்ளது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய். அவரின் 66-வது படமான ’வாரிசு’ திரைப்படத்தை வம்ஷி பைடிப்பள்ளி இயக்குகிறார். படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தன்னா நடிக்கிறார். தமன் இசையமைக்கும் இப்படத்தில் சரத்குமார், ஷாம், பிரபு, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, யோகி பாபு, சங்கீதா கிரிஷ் மற்றும் சம்யுக்தா சண்முகநாதன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.



    பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள விஜய் நற்பணிகளுக்கு பெயர் போனவர். அவரது விஜய் மக்கள் இயக்கத்தினர் ரத்ததானம், அன்னதானம், மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், மருத்துவ முகாம் என மக்களுக்கு பல நற்பணிகளை செய்து வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தேசியக்கொடியை ட்விட்டர் புரொபைல் பிக்சராக மாற்றிய ரஜினிகாந்த்!



    அதோடு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் தளபதி விஜய் விலையில்லா விருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தஞ்சை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர், அங்குள்ள அரசு மருத்துவமனை அருகே நடத்தி வரும் விலையில்லா விருந்தகத்தின் சேவை 1000 நாட்களைக் கடந்துள்ளது. அங்கு தினமும் காலை மற்றும் மதியம் இலவச உணவு வழங்கப்படுகிறது. 1000 நாட்களைக் கடந்த இந்த விலையில்லா விருந்தகத்தின் பயனாளிகள் பலர், விஜய் மக்கள் இயக்கத்தினரை பாராட்டியுள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Thalapathy vijay

    அடுத்த செய்தி