ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பாரதிராஜா நடிக்கும் படத்தை இயக்கும் தங்கர் பச்சன்

பாரதிராஜா நடிக்கும் படத்தை இயக்கும் தங்கர் பச்சன்

பாரதிராஜா நடிக்கும் படத்தை இயக்கும் தங்கர் பச்சன்

பாரதிராஜா நடிக்கும் படத்தை இயக்கும் தங்கர் பச்சன்

தங்கர் பச்சன் இயக்கத்தில் இணைந்து நடிக்கும் கவுதம் வாசுதேவ் மேனன், பாரதிராஜா, யோகிபாபு, மம்தா மோகன்தாஸ்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

பாரதிராஜா, கவுதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு நடிக்கும் படத்தை தங்கர் பச்சன் இயக்குகிறார்.

தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக கவனம் பெற்று இயக்குநராக உயர்ந்தவர் தங்கர்பச்சான். அவர் இயக்கிய அழகி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதை தொடர்ந்து ஒன்பது ரூபாய் நோட்டு உள்ளிட்ட கவனிக்கத்தக்க படங்களை அவர் இயக்கினார்.

கடந்த சில ஆண்டுகளாக திரைப்படம் இயக்காமல் இருந்த தங்கர் பச்சன் தற்போது யோகி பாபு, பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மம்தா மோகன்தாஸ் ஆகியோர் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குகிறார்.

Also read... மைனஸ்-களை ப்ளஸ் ஆக்கி... பொல்லாதவனாய் பொளந்துகட்டும் அசுரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

இதற்கான படப்பிடிப்பு கும்பகோணத்தில் தொடங்கியுள்ளது. அந்த திரைப்படத்தில் இந்த நான்கு பேருக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் திரைக்கதை எழுதப்பட்டுள்ளது.

மேலும் அந்த திரைப்படத்திற்கு கருமேகங்கள் கலைகின்றன என தலைப்பு வைத்துள்ளார் தங்கர் பச்சன். இந்தப் படமும் அவரின் முந்தைய படங்களை போல அழுத்தமான, ஆழமான கதைகளத்துடன் இருக்கும் என படக்குழு தரப்பில் கூறுகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Yogibabu, Bharathiraja, Entertainment, Gautham Vasudev Menon