மகனை ஹீரோவாக்கிய தங்கர்பச்சான்!

எனது மகன் விஜித் பச்சான் சினிமாவில் இன்று பயணத்தை தொடங்கி இருக்கிறார். எனது இயக்கத்தில் நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

news18
Updated: July 20, 2019, 5:00 PM IST
மகனை ஹீரோவாக்கிய தங்கர்பச்சான்!
தங்கர்பச்சான் மகனுக்கு மாலையிடும் சைதை துரைசாமி
news18
Updated: July 20, 2019, 5:00 PM IST
பிரபல இயக்குநர் தங்கர்பச்சான் தான் இயக்கும் படத்தில் தனது மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தியுள்ளார்.

பாண்டவர் பூமி, காதல் கோட்டை, கண்ணெதிரே தோன்றினாள் உள்ளிட்ட பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய தங்கர்பச்சான், அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார்.

பாரதிராஜாவுக்கு பின்னர் கிராமங்களின் எதார்த்தத்தை திரைக்கு கடத்திய தங்கர் பச்சான், களவாடிய பொழுதுகள் படத்தை அடுத்து சமீபகாலமாக படங்கள் எதுவும் இயக்காமல் இருந்தார்.


இந்நிலையில் தற்போது அவருடைய மகன் விஜித்தை ஹீரோவாக வைத்து தனது அடுத்த படத்தை இயக்குகிறார் தங்கர்பச்சான். இந்தப் படத்தில் மிலனா நாகராஜ், அஸ்வினி ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர். மேலும் முனிஷ்காந்த், மன்சூர் அலிகான், யோகிராம் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிஎஸ்என் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை அதிமுக முன்னாள் மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் இயக்குநர் தங்கர்பச்சான், “எனது மகன் விஜித் பச்சான் சினிமாவில் இன்று பயணத்தை தொடங்கி இருக்கிறார். எனது இயக்கத்தில் நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. என்னை ஆதரித்து வளர்த்தெடுத்தது போலவே அவரை வாழ்த்தி நிறை குறைகளை சுட்டிக்காட்டி வளர்த்தெடுக்க வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.வீடியோ பார்க்க: கனவு நாயகன் விஜய் தேவரகொண்டா நேர்காணல்

First published: July 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...