Actor Vivek: அரசியலில் இருந்து விலக வேண்டாம்' என்றார் விவேக் - தமிழருவி மணியன்

விவேக் - தமிழருவி மணியன்

தமிழக அரசியலில் சென்ற வருட இறுதிவரை இயங்கிக் கொண்டிருந்தவர் தமிழருவி மணியன்.

  • Share this:
    தமிழக அரசியலில் சென்ற வருட இறுதிவரை இயங்கிக் கொண்டிருந்தவர் தமிழருவி மணியன். திமுகவிலிருந்து வைகோ பிரிந்த போது வைகோவையும், தேமுதிக தோன்றியபோது விஜயகாந்தையும், பிறகு ரஜினிகாந்தையும் திமுகவுக்கு மாற்றாக முன்னுறுத்தி, அவர்களை முதலமைச்சர் ஆக்குவேன் என அரசியல் களமாடியவர். கடைசி வாய்ப்பாக அமைந்த ரஜினி, அரசியல் சூழ்ச்சியில் சிக்காமல் எஸ்கேப்பாக, விரக்தியில், இனிமேல் எப்போதும் அரசியல் இல்லை என்று வெளியேறினார். இதை அவர் பலமுறை கூறியிருப்பதால் யாரும் அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. திராவிட அரசியலின் எதிரி என்ற ஒரே அடையாளத்துடன் இயங்கும் தமிழருவி மணியனின் ஒரே சொத்து, ஊழல் செய்யாதவர் என்பது. மறைந்த நடிகர் விவேக்கையும் தனது அரசியல் தொடர்பாக சந்தித்திருக்கிறார் தமிழருவி மணியன். அந்த சந்திப்பை தற்போது அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

    "ஒருநாள் சாலிகிராமத்திலுள்ள விவேக் வீட்டிற்கு சென்றிருந்தேன். மனம் நெகிழ்ந்து வாசலில் வந்து வரவேற்றார். ஒருமணி நேரம் இருவரும் பேசினோம். அவருடைய பல்துறை அறிவாற்றலும், மனிதநேயமும், சமூக நலனில் அவருக்கிருக்கும் உண்மையான அக்கறையும், தூய்மையான அரசியல் இந்த மண்ணில் மீண்டும் மலரவேண்டும் என்ற அவருடைய ஏக்கமும் எனக்கு வியப்பை ஏற்படுத்தின. சந்திப்பின் முடிவில், அவருடைய நினைவாக வைத்துக்கொள்ளும்படி ஒரு விலையுயர்ந்த பேனாவை எனக்களித்தார். ’அன்பைத்தவிர வேறு எதையும் எவரிடத்தும் நான் பெறுவதில்லை’ என்று மறுத்துவிட்டேன்.



    பொய்த்தனமும் போலியும் மலிந்த அரசியலிலிருந்து முற்றிலும் நான் விலகுவதாக அறிவித்த அறிக்கையை வாசித்த விவேக் ”ஒரு பேனாவைக்கூட பெற மறுக்கும் ஒருவர் பொதுவாழ்விலிருந்து விலகுவதென்று எடுத்த முடிவைத் திரும்பப் பெறவேண்டும்” என்று ட்வீட் செய்து தொலைபேசியிலும் என்னை அழைத்து ’விலக வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டார். என்னுடைய ‘வழிப்போக்கனின் வாழ்க்கை அனுபவங்கள்’ நூலை கடந்த ஆண்டு கொரோனா சூழலில் வாசித்துக்கொண்டிருப்பதாக பதிவிட்டதோடு தொலைபேசியிலும் அழைத்துப் பேசிய விவேக், ‘கொரோனாவின் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தவுடன் நாம் அவசியம் சந்திக்கவேண்டும். நிறைய பேசவேண்டும்’ என்றார்” என அந்த அறிக்கையில் தமிழருவி மணியன் குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: