தெலுங்கு ஏஜென்ட் படத்துக்கு இசையமைக்கும் ஹிப் ஹாப் தமிழா...?

ஹிப் ஹாப் ஆதி

ஹிப் ஹாப் தமிழா இசையமைத்த படங்களில் தனி ஒருவன் மட்டுமே தனியான அடையாளத்துடன் இருந்தது. அதன் பிறகு அப்படியொரு இசையை அவர் தந்ததில்லை என்ற தகவல் சுரேந்தர் ரெட்டிக்கு தெரியவில்லை.

  • News18
  • Last Updated :
  • Share this:
தெலுங்கில் உருவாகும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் ஏஜென்ட். இதற்கு தமன் இசையமைப்பதாக அறிவித்திருந்த நிலையில், அவருக்குப் பதில் ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கலாம் என்கின்றன ஹைதராபாத்திலிருந்து வரும் செய்திகள்.

நாகார்ஜுன், அமலா தம்பதியின் மகனான அகில் இதுவரை அமுல்பேபியாகதான் இருந்தார். அவர் உடற்பயிற்சி செய்து குட்டி ராம்போவாக மாறி நடிக்கும் படம் ஏஜென்ட். ஸ்பை த்ரில்லர் படம். சுரேந்தர் ரெட்டி படத்தை இயக்குகிறார். தெலுங்கின் தற்போதைய பேவரைட்டான தமன் இசையமைப்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திடீர் திருப்பமாக, அவருக்குப் பதில் ஹிப் ஹாப் தமிழாவை ஒப்பந்தம் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது. சுரேந்தர் ரெட்டி 2016 இல் தனி ஒருவன் படத்தை தெலுங்கில் துருவா என்ற பெயரில் ரீமேக் செய்தார். ராம் சரண் நடித்த இந்தப் படத்துக்கு, தனி ஒருவனுக்கு இசையமைத்த ஹிப் ஹாப் தமிழாவே இசையமைத்திருந்தார். அந்தப் படத்தின் பாடல்கள், பின்னணி இசை பிடித்துப் போனதால் அவரையே ஏஜென்டுக்கும் இசையமைக்க, சுரேந்தர் ரெட்டி தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.



Also read... விஜய் ஆண்டனி இயக்குனராகும் பிச்சைக்காரன் 2...!

ஹிப் ஹாப் தமிழா இசையமைத்த படங்களில் தனி ஒருவன் மட்டுமே தனியான அடையாளத்துடன் இருந்தது. அதன் பிறகு அப்படியொரு இசையை அவர் தந்ததில்லை என்ற தகவல் சுரேந்தர் ரெட்டிக்கு தெரியவில்லை.
Published by:Vinothini Aandisamy
First published: