ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

''இந்தியாவுக்கு ஆதார் கார்டு எவ்வளவு முக்கியமோ...'' - வாரிசு இசை வெளியீட்டு விழாவில் தமன் உருக்கம்

''இந்தியாவுக்கு ஆதார் கார்டு எவ்வளவு முக்கியமோ...'' - வாரிசு இசை வெளியீட்டு விழாவில் தமன் உருக்கம்

தமன் - விஜய்

தமன் - விஜய்

Varisu Vijay : என்னைவிட என் மகன் அதிக ஆர்வமாக இருந்தான். ஒழுங்கா நல்லா மியூஸிக் போடு என்றான்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது .வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து பிரபலங்கள் பேசி வருகிறார்கள்.

அந்த வகையில் இந்தப் படத்தின் இசையமைப்பாளர் தமன் பேசியதாவது, ''27 வருட காத்திருப்பு. வாரிசு படத்தில் நிறைவேறியுள்ளது. விஜய்யின் கோயமுத்தூர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கிடைச்சா, போக்கிரி பொங்கல் பாடல்களில் பணியாற்றியுள்ளேன்.

என்னைவிட என் மகன் அதிக ஆர்வமாக இருந்தான். ஒழுங்கா நல்லா மியூஸிக் போடு என்றான். இந்தியாவிற்கு ஆதார் கார்டு எவ்வளவு முக்கியமோ அதுபோல விஜய் படத்திற்கு இசையமைப்பது முக்கியம்.

விஜய் படத்திற்கு இசையமைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படத்திற்கு உருவாக்கிய 6 டியூனுக்கும் மாற்று டியூனே போடல. சொன்னையில பிறந்து வளந்ததற்கு இன்னைக்குதான் பெருமைபடுறேன். வாழ்க்கை முழுமையடைந்திருக்கிறது. வாழ்க்கை முழுவதும் நான் தளபதி ரசிகன்'' என்றார்.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Varisu