ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

''ஒழுங்கா மியூசிக் போடு'' - முக்கியமான நபரிடமிருந்து தனக்கு வந்த மிரட்டல்: வாரிசு இசை வெளியீட்டு விழாவில் பகிர்ந்த தமன்

''ஒழுங்கா மியூசிக் போடு'' - முக்கியமான நபரிடமிருந்து தனக்கு வந்த மிரட்டல்: வாரிசு இசை வெளியீட்டு விழாவில் பகிர்ந்த தமன்

தமன் - விஜய்

தமன் - விஜய்

Varisu Vijay: விஜயின் கோயமுத்தூர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கிடைச்சா' பாடலில் இருந்து போக்கிரி பொங்கல் பாடல் வரை பணியாற்றியுள்ளேன். என்னுடைய 27 வருட காத்திருப்பு, வாரிசு படத்தில் நிறைவேறியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான 'அல வைக்குந்தபுரமுலோ' பட பாடல்கள் தேசிய அளவில் கவனம் பெற்றன. இதன் பிறகு தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளிலும் பிரபல நடிகர்களின் படங்களுக்கு தமன் தான் இசையமைப்பாளர்.

பல பேட்டிகளில் விஜய் படத்துக்கு இசையமைப்பது தான் தனது கனவு என்று தமன் தெரிவித்திருந்தார். வாரிசு படத்தின் மூலம் அந்த கனவு நினைவாகியிருக்கிறது. அதற்கேற்ப ரஞ்சிதமே, தீ தளபதி என வாரிசு பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி இன்ஸ்டன்ட் ஹிட்டானது.

இந்த நிலையில் விஜய் படத்துக்கு இசையமைத்தது தொடர்பாக வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமன் உருக்கமாக பேசியது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. விழாவில் தமன் பேசியதாவது,

''விஜயின் கோயமுத்தூர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கிடைச்சா' பாடலில் இருந்து போக்கிரி பொங்கல் பாடல் வரை பணியாற்றியுள்ளேன். என்னுடைய 27 வருட காத்திருப்பு, வாரிசு படத்தில் நிறைவேறியுள்ளது.

இந்த படத்தின் பாடல் இசையமைப்பு பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, 10 ஆம் வகுப்பு படிக்கும் என்னுடைய மகன் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டே இருந்தார். அதுவும் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு செல்லும் பொழுது தன்னை பார்த்து எப்படி மியூசிக் போட்டிருக்கிறாய்! ஒழுங்கா நல்ல மியூசிக் போடு! என்று சொன்னார்.

விஜய் படத்திற்கு இசையமைப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தியாவிற்கு ஆதார் கார்டு எவ்வளவு முக்கியமோ, அதுபோல விஜய் படத்திற்கு இசையமைப்பதும் முக்கியம். இந்த திரைப்படத்திற்காக ஆறு டியூன்களை உருவாக்கியதாகவும், அதற்கு ஆப்ஷன் டியூன்களைப் போடவில்லை. இந்த 6 பாடல்களுமே சிறப்பாக இருந்தன.

சென்னையில் பிறந்து வளர்ந்ததற்கு இன்றைக்குதான் பெருமைப்படுகிறேன். வாழ்க்கை முழுமையடைந்திருக்கிறது வாழ்க்கை முழுவதும் தளபதி ரசிகன்'' என்று தன்னுடைய பேச்சை முடித்தார் தமன்.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Actor Vijay, Varisu