விஜய்யின் புதிய பட நாயகி பூஜா ஹெக்டே கொரோனாவால் பாதிப்பு!

பூஜா ஹெக்டே, நடிகர் விஜய்,

தமிழில் 2012ம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தின் வெளிவந்த முகமூடி படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே

  • Share this:
நடிகர் விஜய்யின் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் நாயகி பூஜா ஹெக்டே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் கடந்த வாரம் நடைபெற்றது. ஆனால் இந்த படப்பிடிப்பில் பூஜா கலந்து கொள்ளவில்லை. அவர் நடிக்கும் பகுதிகள் இனிமேல்தான் சென்னையில் படமாக்கப்பட உள்ளன. இந்த நிலையில்தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக பூஜா தெரிவித்துள்ளார்.

வரும் நாட்களில் சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்காக படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் நாயகி இல்லாததால் படப்பிடிப்பு தாமதமாகும் என்று தகவல் வந்துள்ளது.தனக்கு கொரோனா பாசிட்டிவ் என அறிவித்துள்ள நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அனைவருக்கும் வணக்கம், எனக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி நான் வீட்டுத் தனிமையில் இருந்து வருகிறேன். என்னுடன் சமீபத்தில் தொடர்பில் இருந்தவர்கள் தயவுசெய்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள். உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி. தற்போது நல்ல நிலையில் இருக்கிறேன். தயவு செய்து வீட்டில் பாதுகாப்பாக இருங்கள். உங்களை பார்த்துக் கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார்.
ஜார்ஜியாவில் விஜய்யுடன் டூயட் பாடும் பூஜா ஹெக்டே!

சமீபத்தில் நடிகர்கள் சோனு சூட், கத்ரினா கைஃப், அக்‌ஷய் குமார், பரேஷ் ராவல், ஆலியா பட், ரன்பீர் கபூர், ரோஹித் சரஃப் ஆகிய பாலிவுட் நட்சத்திரங்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், அர்ஜூன் கபூர், மலைகா அரோரா போன்றவர்கள் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
எங்கள் வீட்டின் ஆலமரம் சாய்ந்தது... கொரோனா காலத்தில் அட்லீ வீட்டில் நிகழ்ந்த சோகம்

ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்து வரும் பூஜா ஹெக்டே, தமிழில் 2012ம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தின் வெளிவந்த முகமூடி படத்தில் அறிமுகமானவர். தற்போது ஹிந்தியில் Cirkus, பிரபாஸ் உடன் Radhe Shyam போன்ற படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
Published by:Arun
First published: