சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பீஸ்ட் படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகிறது என்பது குறித்து, புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. இவை இணையத்தில் வைரலாகியுள்ளன.
தளபதி விஜய் இதுவரையில்லாத புதிய கெட் அப்பில், கோலமாவு கோகிலா, டாக்டர் வெற்றிப் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்து வருவதால், படத்தின் உருவாக்கமும், புரொமோஷன்களும் பிரமாண்டமாக உள்ளன. இதனால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலையில் இருக்கிறார்கள்.
அனிருத் பீஸ்ட் படத்திற்கு இசையமைப்பதால் பாடல்கள் மற்றும் பி.ஜி.எம். மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தின் டைட்டில அறிவிப்பு செய்யும்போது வெளியான பி.ஜி.எம். சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
கூடுதல் சுவாரசியமாக, பீஸ்ட் படத்தில் ஒரு பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். இந்நிலையில் பீஸ்ட்டின் முதல் பாடல் பொங்கலையொட்டி வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பாடல், சிவகார்த்திகேயன் எழுதியதாக இருக்கும் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.
இதையும் படிங்க..ஒரு நாள் பிக் பாஸாக மாறும் போட்டியாளர்கள்!
கடந்த சில நாட்களாகவே பீஸ்ட் முதல் பாடல் குறித்து சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வரும் நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். டாக்டர் படத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்கள், அப்படியே பீஸ்ட்டிலும் இடம்பெற்றுள்ளார்கள்.
தங்க கடத்தலை அடிப்படையாக கொண்ட கதை என்றும், ராணுவ உளவு அதிகாரி தொடர்பான கதை என்றும் பீஸ்ட்டின் கதைக்களம் குறித்து தகவல்கள் பரவியுள்ளன. நெல்சன் படத்தில் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பதாலும், தளபதி விஜய் காமெடியில் கலக்குவார் என்பதாலும் பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களுக்கு புதிய விருந்தாக அமையும்.
இதையும் படிங்க.. மாதவனை அசத்திய ஹிரித்திக் ரோஷனின் வேதா லுக்..இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.