ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வேகம் காட்டும் வாரிசு.. சரசரவென முடிந்த ரிலீசுக்கு முன்பான வியாபாரங்கள்.. முடிவானது தமிழக வெளியீடு.!

வேகம் காட்டும் வாரிசு.. சரசரவென முடிந்த ரிலீசுக்கு முன்பான வியாபாரங்கள்.. முடிவானது தமிழக வெளியீடு.!

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

விஜயின் வாரிசு திரைப்படத்தை தமிழகத்தில் லலித் குமார் வெளியிடுகிறார்

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படத்தை தமிழகத்தில் லலித் குமார் வெளியிடுகிறார். 

இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார் விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. இதில் விஜய் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன்.

இந்த திரைப்படத்தை தமிழகத்தில் மாஸ்டர் மற்றும் விஜய் 67 படத்தின் தயாரிப்பாளருமான லலித் குமார் வெளியிடுகிறார். வாரிசு திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமம், தொலைக்காட்சி உரிமம், வெளிநாட்டு விநியோகம், இந்தி டப்பிங் ரைட்ஸ் உள்ளிட்ட பல வியாபாரங்கள் ஏற்கனவே முடிவடைந்தன.

ஆனால் தமிழக வெளியீடு உரிமை இறுதியாகாமல் இருந்தது. இந்த நிலையில் தமிழக வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பாளரான லலித் குமாருக்கு தில் ராஜு வழங்கியுள்ளார்.  இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தகிறது.  அதற்கான அறிவிப்பு ஓரிரு வாரங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம்அறிவித்துள்ளது. தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்ததுடன் பொங்கலுக்கு வாரிசு படம் ரிலீஸ் ஆகின்றது என்றும் நேற்று அந்த ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also read... ஸ்டைலா... கெத்தா... வேட்டி சட்டையில் கலக்கும் கமல்... வைரலாகும் போட்டோஸ்!

முன்னதாக இந்த தீபாவளிக்கு ‘வாரிசு’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என்று படத்தின் இசையமைப்பாளர் தமன் தெரிவித்திருந்த நிலையில் நேற்று ரிலீஸ் அப்டேட் மட்டுமே வெளியானது. இந்நிலையில் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடல் அடுத்த வாரம் வெளியாகும் என்ற தகவல் சினிமா வட்டாரங்களில் பரவி வருகின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Vijay