Video | ஈரானிலும் விஜய் பிரபலம் தான்...! போக்கிரி பாடலுக்கு ஜிம்மில் அட்டகாசமாக நடனமாடி அசத்திய மக்கள்

விஜய் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான போக்கிரி படம் மாபெரும் வெற்றியடைந்தது.

news18
Updated: August 14, 2019, 1:18 PM IST
Video | ஈரானிலும் விஜய் பிரபலம் தான்...! போக்கிரி பாடலுக்கு ஜிம்மில் அட்டகாசமாக நடனமாடி அசத்திய மக்கள்
போக்கிரி விஜய்
news18
Updated: August 14, 2019, 1:18 PM IST
ஈரானில் ஜிம்மில் விஜய்யின் போக்கிரி பாடலுக்கு அட்டகாசமாக நடனமாடி அசத்திய மக்கள் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

விஜய்யின் ரசிகர்கள் பற்றி நாம் அறிந்ததே. விஜய் மீது வைத்துள்ள அன்பை காட்ட அவர்கள் விஜய் சம்பந்தப்பட்ட செய்திகள் எது வந்தாலும் அதை சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். தற்போது ஈரானில் உள்ள ஜிம் ஒன்றில் பயிற்சியின் போது மக்கள் நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அப்படி அந்த வீடியோ வைரலாக காரணம் அவர்கள் விஜய்யின் பாடலுக்கு நடனமாடியதே. விஜய் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான போக்கிரி படம். அந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தன. குறிப்பாக ’மாம்பழமா மாம்பழம்’ என்ற பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த பாடலுக்கு தான் ஜிம்மில் அவர்கள் நடனமாடி அதை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.





இப்படி ஒரு வீடியோ கிடைக்க அந்த வாய்ப்பை நழுவ விடாமல் விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

Also watch

First published: August 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...