பிரமாண்ட அரங்கத்தில் பீஸ்ட் நான்காம்கட்ட படப்பிடிப்பு!

விஜய்

பீஸ்டில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணா தாஸ், யோகி பாபு, ஷைன் டாம் சாக்கோ உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பீஸ்ட் படத்தின் நான்காம்கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஸ்டுடியோவில் நேற்று தொடங்கியது. முக்கியமான காட்சிகள் இதில் படமாக்கப்பட உள்ளன.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இந்த வருடம் ஜார்ஜியாவில் பீஸ்டின் முதல்கட்டப் படப்பிடிப்பு தொடங்கியது. இரண்டாம் மற்றும் மூன்றாம்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தினர். பிரமாண்ட ஷாப்பிங் மால் அரங்கில் இந்தப் படப்பிடிப்பு நடந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரண்டு படங்களுக்கு நடுவில் அதிகபட்சம் ஒன்றோ இரண்டோ வாரங்கள் மட்டுமே இடைவெளி எடுத்துக் கொள்கிறவர் விஜய். ஒரு படத்தின் படப்பிடிப்பு தொடங்கினால், அனாவசியமாக நாள்களை வீணடிப்பதில்லை. பீஸ்டிலும் அப்படியே. மூன்றாம் கட்ட படப்பிடிப்பு முடிந்து சில தினங்களே ஆன நிலையில் நேற்று நான்காவது ஷெட்யூல்ட் தொடங்கியது. சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் இதற்கென அமைக்கப்பட்ட அரங்கில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

Also read... ஓ மை கோஸ்ட் - சன்னி லியோனின் புதிய தமிழ்ப் படம்...!

பீஸ்டில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணா தாஸ், யோகி பாபு, ஷைன் டாம் சாக்கோ உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
Published by:Vinothini Aandisamy
First published: