Home /News /entertainment /

சூப்பர் குட் பிலிம்ஸின் 100-வது படத்தில் நடிக்கும் விஜய்… நடிகர் ஜீவா வெளியிட்ட தகவல்

சூப்பர் குட் பிலிம்ஸின் 100-வது படத்தில் நடிக்கும் விஜய்… நடிகர் ஜீவா வெளியிட்ட தகவல்

விஜய்

விஜய்

சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் காட்ஃபாதர் திரைப்படம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படம் மலையாளத்தில் மெகா ஹிட்டான லூசிஃபர் படத்தின் ரீமேக்காகும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சூப்பர் குட் பிலிம்ஸின் 100-வது படத்தில் விஜய் நடிப்பார் என நடிகர் ஜீவா தகவல் வெளியிட்டுள்ளார்.

    விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் முன்னணி இயக்குனர் வம்சி இயக்குகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு இந்த படத்தை தயாரிக்கிறார்.

    விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், யோகி பாபு ஷாம், குஷ்பு உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்றுள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதத்திற்குள் நிறைவு பெற்று விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சிறந்த நடிகருக்கான SIIMA விருதைப் பெற்ற சிம்பு… மாநாடு படத்திற்காக வழங்கப்பட்டது

    இதைத் தொடர்ந்து அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் விஜய் தனது 67-வது படத்தின் ஷூட்டிங்கில் இணைகிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது.

    இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் விஜய்க்கு வில்லன்களில் ஒருவராக இந்தி நடிகர் சஞ்சய் தத் இடம்பெறுகிறார்.

    இந்நிலையில் தென்னிந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சூப்பர் குட் பிலிம்ஸின் 100வது படத்தில் விஜய் நடிப்பார் என்று நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார். ஜீவாவின் தந்தை ஆர்.பி. சவுத்ரிதான்சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Anushka: விஜய் டிவி சீரியலை பாராட்டிய அனுஷ்கா... மகிழ்ச்சியை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துக் கொண்ட நடிகை!

    இந்த நிறுவனத்தின் சார்பாக தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் காட்ஃபாதர் திரைப்படம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படம் மலையாளத்தில் மெகா ஹிட்டான லூசிஃபர் படத்தின் ரீமேக்காகும்.

    விஜய்யின் 68-வது படம் சூப்பர் குட் பிலிம்ஸ் பேனரில் உருவாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தில் ஜீவாவும் இடம்பெற வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Vijay

    அடுத்த செய்தி