ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Thalapathy Vijay: பிரபல நடிகையுடன் விஜய்யின் மனைவி சங்கீதா - கவனம் பெறும் படம்!

Thalapathy Vijay: பிரபல நடிகையுடன் விஜய்யின் மனைவி சங்கீதா - கவனம் பெறும் படம்!

விஜய் - சங்கீதா

விஜய் - சங்கீதா

விஜய்யின் பட விழாக்களை தவிர வேறு எங்கும், சங்கீதாவை காண முடியாது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நடிகர் விஜய் மனைவியின் லேட்டஸ்ட் படம் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய். அவரின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

  இதையடுத்து இயக்குநர் வம்சி இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படம் விஜய்யின் 66-வது படமாக உருவாகவிருக்கிறது. இதில் ஹீரோயினாக யார் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

  தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை நடிகர் விஜய்க்கு கடந்த 1999-ஆம் ஆண்டு, சங்கீதாவுடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் திவ்யா சாஷா மற்றும் சஞ்சய் என இரு பிள்ளைகள் உள்ளனர். விஜய்யின் பட விழாக்களை தவிர வேறு எங்கும், சங்கீதாவை காண முடியாது.
   
  View this post on Instagram

   

  A post shared by Sangithakrish (@sangithakrish)  இந்நிலையில் சங்கீதா விஜய்யுடன் எடுத்துக் கொண்ட சமீபத்திய படத்தை நடிகை சங்கீதா கிரிஷ் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதை தற்போது விஜய் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Thalapathy vijay