விஜய் பாடிய ‘வெறித்தனம்' பாடலின் வீடியோ வெளியீடு!

விஜய் பாடிய ‘வெறித்தனம்' பாடலின் வீடியோ வெளியீடு!
நடிகர் விஜய்
  • News18
  • Last Updated: November 6, 2019, 12:36 PM IST
  • Share this:
பிகில் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘வெறித்தனம்’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

ராஜா ராணி, மெர்சல், தெறி ஆகிய படங்களை இயக்கிய அட்லீ, அடுத்ததாக விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் பிகில் திரைப்படத்தை இயக்கியுள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, ஆனந்தராஜ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படம் கடந்த 25-ம் தேதி வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களும் எழுந்தன.



மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - ஏ.ஆர்.ரஹ்மான் - அட்லீ கூட்டணி பிகில் படத்திலும் இணைந்தது. மேலும் இந்தப் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடிகர் விஜய் சொந்தக் குரலில் பாடி அசத்தியுள்ளார். வெறித்தனம் என்ற அப்பாடல் ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்துள்ளது. மேலும் அந்தப் பாடலில் விஜய்யின் நடனமும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது. இந்நிலையில் வெறித்தனம் பாடலின் வீடியோ தற்போது யூடியூபில் வெளியாகியுள்ளது.

First published: November 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading