ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாரிசு vs துணிவு... முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் போட்டியில் யார் வெற்றி?

வாரிசு vs துணிவு... முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் போட்டியில் யார் வெற்றி?

விஜய் - அஜித்

விஜய் - அஜித்

துணிவு படத்தைப் பொறுத்தவரை, படத்தின் முதல் நாள் டிக்கெட் விற்பனை இப்போதுவரை 6.63 கோடிக்கு விற்கப்பட்டு பின்தங்கியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தளபதி விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு ஆகிய இரண்டு படங்களும் மோதிக்கொள்வதால், ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். நாளை இரண்டு படங்களும் வெளியாகும் நிலையில் புக்கிங் ஜெட் வேகத்தில் நடந்து வருகிறது.

கடந்த ஆண்டு அஜித் மற்றும் விஜய் இருவருக்கும் முறையே வலிமை மற்றும் பீஸ்ட் ஆகியப் படங்கள் வெளியாகின. இது நடுநிலை பார்வையாளர்களை மட்டுமல்ல, அவர்களுடைய ரசிகர்களும் கூட அவர்களின் முயற்சியில் திருப்தி அடையவில்லை. இப்போது, ​​இந்தப் பொங்கலை முன்னிட்டு இரு உச்ச நடிகர்களின் படங்களும் வெளியாகவிருக்கின்றன. இந்தப் படங்களுக்கான டிக்கெட்டுகள் மிக விரைவாக விற்பனையாகி வருவதால், நாளை தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ் வசூலில் திணறுவது உறுதி.

வாரிசு பட்த்தைப் பொறுத்தவரை, நேற்று இரவு வரை 7.53 கோடிக்கு டிக்கெட்டுகள் விற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. விரைவில் இது 4 லட்சம் டிக்கெட்டுகளைக் கடக்கும். இன்னும் 1 நாள் உள்ள நிலையில், டிக்கெட்டுகளின் விற்பனை 10-12 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது விஜய்யின் பீஸ்ட் படத்தை நெருங்கவில்லை.

முன்னணி நடிகருக்கு கதை சொன்னதை உறுதிப்படுத்திய ஹெச்.வினோத்!

துணிவு படத்தைப் பொறுத்தவரை, படத்தின் முதல் நாள் டிக்கெட் விற்பனை இப்போதுவரை 6.63 கோடிக்கு விற்கப்பட்டு பின்தங்கியுள்ளது. சுமார் 3.27 லட்சம் டிக்கெட்டுகள் இதில் விற்பனையாகியுள்ளன. சுவாரஸ்யமாக, மேற்குறிப்பிட்டுள்ள தொகை துணிவு படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகளை உள்ளடக்கியது. மறுபுறம், தளபதி விஜய்யின் வாரிசு படத்தின் வசூல் தமிழ் வெர்சனை மட்டுமே உள்ளடக்கியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Ajith, Actor Thalapathy Vijay, Thunivu, Varisu