ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜய்யின் வாரிசு ட்ரைலர் வெளியீடு எப்போது தெரியுமா?

விஜய்யின் வாரிசு ட்ரைலர் வெளியீடு எப்போது தெரியுமா?

விஜய்

விஜய்

தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ளது வாரிசு.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ் சினிமாவில் வாரிசு ஃபீவர் தொடங்கிவிட்டது. ஹோர்டிங்குகள், மெட்ரோ ரயில் விளம்பரம் மற்றும் பிரம்மாண்ட ஆடியோ வெளியீட்டு விழா உள்ளிட்ட பிரமிக்க வைக்கும் புரொமோஷன் பணிகள் டாக் ஆஃப் தி டவுனாக மாறியுள்ளது. இப்போது, ​​அனைவரின் பார்வையும் படத்தின் டிரெய்லர் மீதும் திரும்பியுள்ளது.

ஜனவரி 2023 முதல் வாரத்தில் வாரிசு ட்ரெய்லர் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஆடியோ வெளியீட்டு விழாவை புத்தாண்டு தினத்தன்று சன் டிவி ஒளிபரப்பப் போகிறது என்பதை ஏற்கனவே தெரிவித்திருந்தோம். இதையடுத்து ஜனவரி 1ம் தேதிக்கு பிறகு டிரைலரை வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதே சமயம், புத்தாண்டு தினத்தன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஆடியோ வெளியீட்டு விழாவுடன் டிரைலரும் வெளியாகும் என்றும் சில செய்திகள் தெரிவிக்கின்றன. 2023 பொங்கலுக்கு பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு ஆகியப் படங்கள் ஒன்றாக மோதுவதை நாம் அனைவரும் அறிவோம். ஆனாலும் சரியான வெளியீட்டு தேதியை தயாரிப்பு நிறுவனங்கள் இன்னும் வெளியிடவில்லை.

தணிக்கைப் பணிகளுக்குப் பிறகு மேற்குறிப்பிட்ட படங்களின் வெளியீட்டு தேதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று தெரிகிறது. இரண்டு படங்களும் அடுத்த வாரம் தணிக்கை செய்யப்படவுள்ளது. கடைசி நிமிட குழப்பத்தைத் தவிர்க்க படக்குழுவினர் இறுதி தேதியை, பட வெளியீட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அறிவிப்பார்கள். தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ளது வாரிசு.

உலகளவில் 7000 கோடி வசூலை குவித்த அவதார்: தி வே ஆஃப் வாட்டர்!

வாரிசு படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, கணேஷ் வெங்கட்ராமன், சங்கீதா, சம்யுக்தா, எஸ்.ஜே. சூர்யா, சதீஷ், வி.டி.வி கணேஷ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கே.எல் படத்தொகுப்பாளராக பணிபுரிந்துள்ளார், தமன் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Actress Rashmika Mandanna