ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

எல்லாம் ரெடி.. நாளை வெளியாகும் வாரிசு டிரைலர்? குஷியில் விஜய் ரசிகர்கள்!

எல்லாம் ரெடி.. நாளை வெளியாகும் வாரிசு டிரைலர்? குஷியில் விஜய் ரசிகர்கள்!

விஜய்

விஜய்

வாரிசு படத்துடன் பாக்ஸ் ஆபிஸில் மோதும் துணிவு படத்தின் ட்ரைலர் சில தினங்கள் முன்பு வெளியானது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்துள்ளார் விஜய். தில் ராஜு தயாரித்துள்ள இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. வித்தியாசமான கேரக்டரில் விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றார் தமன். கடந்த வாரம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

இன்று வாரிசு திரைப்படம் தணிக்கை குழுவிடம் சமர்பிக்கப்பட்டு யு சான்றிதழ் பெற்றுள்ளது. அதோடு படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 49 நிமிடம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதற்கிடையே படத்தின் டிரைலரை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். படம் பொங்கலுக்கு வெளியாகும் நிலையில், வாரிசு படத்துடன் பாக்ஸ் ஆபிஸில் மோதும் துணிவு படத்தின் ட்ரைலர் சில தினங்கள் முன்பு வெளியானது. ஆனால் வாரிசு படத்தின் டிரைலர் இன்னும் வெளியாகாதது விஜய் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

கோல்டன் குளோப்ஸ் விருது வழங்கும் விழாவில் ஆர்.ஆர்.ஆர் படக்குழு!

இந்நிலையில் விஜய்யின் வாரிசு பட ட்ரைலர் நாளை வெளியாகும் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதைக்கேட்ட ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Thalapathy Vijay