நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் டிரைலர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்துள்ளார் விஜய். தில் ராஜு தயாரித்துள்ள இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. வித்தியாசமான கேரக்டரில் விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றார் தமன். கடந்த வாரம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
வாரிசு திரைப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்த செய்தியை முன்பே தெரிவித்திருந்தோம். இந்நிலையில் தற்போது இதனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கும் தயாரிப்பு நிறுவனம், வாரிசு படத்தின் டிரைலர் ரிலீஸையும் அறிவித்துள்ளனர். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம், “வாரிசு திரைப்படத்தின் டிரைலர் நாளை மாலை 5 மணிக்கு சன் டிவி யூ-ட்யூப் சேனலில் வெளியாகும். சீ ’யு’ சூன்” என படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்ததை குறிப்பிட்டுள்ளனர்.
யு சான்றிதழ் பெற்ற விஜய்யின் வாரிசு! ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?
#VaaThalaivaa it’s time for #VarisuTrailer 🔥
Releasing Tomorrow at 5 PM on @SunTV YouTube channel 💥
See ‘U’ soon nanba 😁#VarisuGetsCleanU#Thalapathy @actorvijay sir @directorvamshi @MusicThaman @iamRashmika @7screenstudio @TSeries #Varisu #VarisuPongal pic.twitter.com/OAm0gBhV48
— Sri Venkateswara Creations (@SVC_official) January 3, 2023
இதைப் பார்த்த ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் உச்சத்தில் இருக்கிறார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Thalapathy Vijay, Actress Rashmika Mandanna, Tamil Cinema