ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

2023-ம் ஆண்டு விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தான்... என்ன விஷயம் தெரியுமா?

2023-ம் ஆண்டு விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தான்... என்ன விஷயம் தெரியுமா?

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

‘தளபதி 67’ பபடத்தைப் பொறுத்தவரையில், அப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இயக்குனர் இன்னும் வெளியிடவில்லை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

5 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே ஆண்டில் விஜய்யின் இரு படங்கள் வெளியாவதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

விஜய் நடிப்பில் கடைசியாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான படம் ‘பீஸ்ட்’. அவர் இப்போது தனது அடுத்த இருமொழிப் படமான 'வாரிசு' ரிலீஸுக்காக காத்திருக்கிறார். இப்படம் ஜனவரி 12, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வம்ஷி பைடிபள்ளி இயக்கியுள்ள இந்த திரைப்படம் ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது. இதில் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதற்கிடையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தளபதி 67' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளார் விஜய். இதன் பூஜை டிசம்பர் 5-ம் தேதி சென்னையில் நடந்தது.

ஜனவரியில் 'வாரிசு' ரிலீஸை தொடர்ந்து, 'தளபதி 67' 2023 தீபாவளிக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 2023ல் விஜய்யின் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆவது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இவரின் இரண்டு படங்கள் ஒரே ஆண்டில் வெளியாகிறது. கடைசியாக, 2017-ல் பைரவா மற்றும் 'மெர்சல்' ஆகிய இரண்டுப் படங்கள் ஒரே ஆண்டில் வெளியாகின. 5 வருடம் கழித்து 2023-ல் மீண்டும் அவரது இரண்டு படங்கள் ஒரே ஆண்டில் வெளியாகிறது. இதற்கு முன் விஜய் நடிப்பில் 2011-ல் காவலன், வேலாயுதம், 2012-ல் நண்பன், துப்பாக்கி, 2014-ல் ஜில்லா, கத்தி ஆகிய படங்கள் வெளியாகின.

கிராமத்து நண்பர்களுடன் சென்னையில் லூட்டி அடித்த மணிமேகலை ஹுசைன்!

‘தளபதி 67’ பபடத்தைப் பொறுத்தவரையில், அப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இயக்குனர் இன்னும் வெளியிடவில்லை. இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும், அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இப்படத்தின் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘கைதி’ மற்றும் ‘விக்ரம்’ படங்களைத் தொடர்ந்து ‘தளபதி 67’ படம் ‘லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்’ ஆக இருக்கும் என்பதும் முன்பே உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Thalapathy Vijay