வாரிசு படத்தின் பாடல்கள் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார் விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. இதில் விஜய் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன். வாரிசு படத்தில் இருந்து ரஞ்சிதமே, தீ தளபதி, சோல் ஆஃப் வாரிசு ஆகியப் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதையடுத்து படத்தின் ஆடியோ லாஞ்ச் பிரமாண்ட விழாவாக வரும் டிசம்பர் 24-ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் வாரிசு படக்குழுவினருடன் நடிகர்கள் கமல் ஹாசன், பவன் கல்யாண், ஷாருக்கான் ஆகியோர் கலந்துக் கொள்வதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. வழக்கமாக பாடல் வெளியீட்டு விழா மேடையில் விஜய் பேசும் அரசியலும், அவர் சொல்லும் குட்டி கதைகளும் பேசுபொருளாக மாறும். அப்படி இந்த முறை என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
#Varisu Audio out on Dec 24th at 4PM 🔥🔥#VarisuAudioLaunch #VarisuALonDec24#Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @Lyricist_Vivek @7screenstudio @TSeries #BhushanKumar #KrishanKumar #ShivChanana#Varisu #VarisuPongal pic.twitter.com/kqTaftBGzj
— Sri Venkateswara Creations (@SVC_official) December 22, 2022
இந்நிலையில் வாரிசு படத்தின் புதிய போஸ்டருடன், அதன் பாடல்கள் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.