ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாரிசு படத்திற்காக சிம்பு பெற்ற சன்மானம் என்ன தெரியுமா?

வாரிசு படத்திற்காக சிம்பு பெற்ற சன்மானம் என்ன தெரியுமா?

விஜய் - சிம்பு

விஜய் - சிம்பு

இதனால் விஜய் - சிம்பு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாகவும், அதோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரட்டிப்பாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வாரிசு படத்தில் சிம்பு பாடிய தீ தளபதி பாடலுக்காக அவர் பெற்ற சன்மானம் என்ன என்பதை தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

இயக்குநர் வம்சி இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வாரிசு படத்தில் சிலம்பரசன் முதன்முறையாக தளபதியுடன் இணைந்துள்ளார். அவர் பாடியுள்ள தீ தளபதி பாடலுக்காக சிம்பு பெற்ற சம்பளம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சமீபத்தில் தனது வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை ருசித்த சிம்பு, வாரிசு படத்திற்காக பணம் எதுவும் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் வாரிசு படத்தில் வெறும் பாடலுடன் நிறுத்தவில்லையாம் சிம்பு. அதாவது படத்தில் சிறப்பு கதாபாத்திரத்திலும் அவர் நடித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் விஜய் - சிம்பு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாகவும், அதோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரட்டிப்பாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

முன்னணி தளத்திற்கு வெப் சிரீஸ் இயக்கும் வெற்றிமாறன் - உறுதிப்படுத்திய ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்!

' isDesktop="true" id="851922" youtubeid="eqBrHvdGbOY" category="cinema">

வம்ஷி பைடிபள்ளி இயக்கியுள்ள வாரிசு படத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், ஷாம், ஸ்ரீகாந்த், யோகி பாபு, ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவும், பிரவீன் கே.எல் படத்தொகுப்பும் மேற்கொள்ள, தில் ராஜு மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Simbu