Home /News /entertainment /

Varisu: விஜய்யின் வாரிசு படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்?

Varisu: விஜய்யின் வாரிசு படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்?

வாரிசு விஜய்

வாரிசு விஜய்

சிறிது இடைவெளி விட்டு, அடுத்தவாரம் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தளபதி விஜய்யின் புதிய படமான 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நடந்து வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி தளபதி விஜய் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    'வாரிசு' படத்தின் தற்போதைய ஷெட்யூல் ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இதில் இயக்குனர் வம்ஷி பைடிப்பள்ளி சோர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தெலுங்கு சினிமா வட்டாரங்களின்படி, அவர் பல வாரங்களாக இரவும் பகலும் இடைவிடாமல் வேலை செய்து வருவதால், ஒரு வாரம் முழு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளார்களாம். அதனால் சிறிது இடைவெளி விட்டு, அடுத்தவாரம் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பொன்னியின் செல்வன் மேக்கிங் ஸ்டில்ஸ்!

    'வாரிசு' படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். இதனை தில் ராஜு தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் பிரமாண்டமாக தயாரிக்கிறார். விஜய், ரஷ்மிகா மந்தனா, பிரபு, ஜெயசுதா, சரத்குமார், குஷ்பு, யோகி பாபு, சங்கீதா, ஷாம், ஸ்ரீகாந்த், சம்யுக்தா, பிரகாஷ் ராஜ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தை 2023 பொங்கல் அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Thalapathy vijay

    அடுத்த செய்தி