ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

குடும்பம்ங்கறது ஜனநாயகமா இருக்கணும் - வாரிசு படத்தை வெளுத்து வாங்கிய பெண்

குடும்பம்ங்கறது ஜனநாயகமா இருக்கணும் - வாரிசு படத்தை வெளுத்து வாங்கிய பெண்

வாரிசு விமர்சனம்

வாரிசு விமர்சனம்

குடும்பம்ங்கறது ஜனநாயகமா இருக்கணும். ஆனா படங்கள் அதைப்பத்தி பேசவே மாட்டேங்குது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தங்களுக்கு நடக்கும் அநியாயங்களை பெண்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பதை வாரிசு திரைப்படம் மார்டனாக சொல்லியிருப்பதாக பார்வையாளர் ஒருவர் கூறிய விமர்சனம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் வம்சி இயக்கியுள்ள 'வாரிசு' படம் நேற்று முன் தினம் திரையரங்குகளில் வெளியானது. தில் ராஜு தயாரித்துள்ள இந்தப் படத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமனின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே வரவேற்பைப் பெற்றன.

வாரிசு திரைப்படம் வெளியாகி விஜய் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பையும், பார்வையாளர்களிடம் கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இந்நிலையில் படம் பார்த்து விட்டு, நடுத்தர வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் கூறிய விமர்சனம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“குடும்பம் முக்கியம்ங்கறது ரைட்டு தான். அதுக்காக குடும்பத்துல நடக்குற எல்லா அநியாயங்களையும் பொறுத்துக்கணும்ன்னு அவசியம் இல்ல. திரும்ப திரும்ப பொம்பளைங்க தங்களுக்கு நடக்குற எல்லா அநியாயங்களையும் பொறுத்துக்கணும்ன்னு ரொம்ப மார்டனா சொல்லிக் கொடுக்குது இந்தப் படம். அது ரொம்ப மோசம். மத்த எல்லாத்தையும் விட, வீட்டுக்காரன் இன்னொரு பெண்ணோட தகாத உறவில் இருந்தாலும் சரி, என்ன பண்ணாலும் சரி, அதை கண்டுக்காம விட்டுட்டு, பொம்பளைங்க குடும்பத்துக்காகவும், குழந்தைகளுக்காகவும் எல்லாத்தையும் பொறுத்துக்கணும்ங்கற அரதப் பழசான ஒரு 50 வருஷத்து வேல்யூவை திரும்பவும் மார்டனா சொல்றது ரொம்ப மோசம்.

வாரிசு படத்தில் குஷ்பு எங்கே? கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்

இந்த தலைமுறைல நாம எவ்வளவோ பேசுறோம், இந்த நேரத்துல திரும்பவும் பழைய விஷயங்களை பெண்களுக்குள் புகுத்தும் படியாக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. அதனால இந்த மாதிரி படம் இனிமேல் வரக் கூடாது. குடும்பம்ங்கறது ஜனநாயகமா இருக்கணும். ஆனா படங்கள் அதைப்பத்தி பேசவே மாட்டேங்குது. திரும்ப திரும்ப பொம்பளைங்க பொறுத்துக்கணும்ன்னு சொல்றதுக்கு இவ்ளோ பட்ஜெட்ல படம் எடுக்க தேவையில்லை” எனத் தெரிவித்திருக்கிறார் அந்தப் பெண். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Varisu