ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாரிசு ரிலீஸ் தேதி எப்போது? டிரைலரில் வெளியாகுமா அப்டேட்? காத்திருக்கும் விஜய் ரசிகர்கள்!

வாரிசு ரிலீஸ் தேதி எப்போது? டிரைலரில் வெளியாகுமா அப்டேட்? காத்திருக்கும் விஜய் ரசிகர்கள்!

வாரிசு

வாரிசு

இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டாலும், எந்த தேதியில் வெளியாகும் என்பதை இன்னும் படக்குழுவினர் அறிவிக்கவில்லை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் விஜய்யின் வாரிசு டிரைலர் இன்று மாலை வெளியாகும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுமா என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்துள்ளார் விஜய். தில் ராஜு தயாரித்துள்ள இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. வித்தியாசமான கேரக்டரில் விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றார் தமன். கடந்த வாரம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

இதையடுத்து வாரிசு படத்தின் டிரைலரை எதிர்பார்த்து காத்திருந்தனர் ரசிகர்கள். அதற்கு பதில் தரும் விதமாக இன்று மாலை 5 மணிக்கு டிரைலர் வெளியாகும் என அறிவித்தனர் வாரிசு தயாரிப்பாளர்கள். இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டாலும், எந்த தேதியில் வெளியாகும் என்பதை இன்னும் படக்குழுவினர் அறிவிக்கவில்லை. இதனால் இன்று மாலை வெளியாகும் டிரைலரில் அதற்கான பதில் கிடைக்குமா என எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள்.

நாளை வெளியாகும் வாரிசு டிரைலர்... எதிர்பார்ப்பில் விஜய் ரசிகர்கள்!

மறுபுறம் பொங்கலுக்கு வெளியாகும் அஜித்தின் துணிவு படத்தின் தேதியும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Thalapathy Vijay