Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Ranjithame: யூ-ட்யூபில் 75 மில்லியன் பார்வைகளைக் கடந்த விஜய்யின் வாரிசு!

Ranjithame: யூ-ட்யூபில் 75 மில்லியன் பார்வைகளைக் கடந்த விஜய்யின் வாரிசு!

வாரிசு ரஞ்சிதமே பாடல்

வாரிசு ரஞ்சிதமே பாடல்

விஜய் குரலில் வெளியான ரஞ்சிதமே பாடலில், சில நொடிகள் அவர் நடனமாடும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வாரிசு படத்தின் முதல் சிங்கிள் ரஞ்சிதமே பாடல் யூ-ட்யூபில் இதுவரை 75 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார் விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் எமோஷனல், ஆக்‌ஷன், ரொமான்ஸ் என அனைத்தும் கலந்துக் கட்டி உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன். அவர் எந்தளவு இதில் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்திருக்கிறார் என்பதை வாரிசு படத்தின் பாடல்களிலிருந்து தெரிந்துக் கொள்ளலாம் என கடந்த மாதம் முன்னணி தமிழ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார் இயக்குநர் வம்சி.

இதற்கிடையே வாரிசு படத்தின் முதல் சிங்கிளான ரஞ்சிதமே பாடல் ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியானது. விஜய் குரலில் வெளியான அப்பாடலில், சில நொடிகள் அவர் நடனமாடும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தது. எப்போதும் போல இந்தப் பாடல் வெளியான உடனேயே யூ-ட்யூபில் பார்வைகளின் எண்ணிக்கை அதிகமானது.

' isDesktop="true" id="847815" youtubeid="zuVV9Y55gvc" category="cinema">

ரஜினிக்கு மிகவும் பிடித்த சீரியல் எது தெரியுமா?

இந்நிலையில் தற்போது வரை ரஞ்சிதமே பாடல் யூ-ட்யூபில் 75 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Actress Rashmika Mandanna