முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / டான்ஸ் வேணுமா டான்ஸ் இல்லே... விஜய் சார் பாடி லாங்குவேஜ் இல்லே... - ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த தில் ராஜு

டான்ஸ் வேணுமா டான்ஸ் இல்லே... விஜய் சார் பாடி லாங்குவேஜ் இல்லே... - ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த தில் ராஜு

தில் ராஜு - விஜய்

தில் ராஜு - விஜய்

வாரிசு படத்தைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துவரும் ஆர்சி 15 படத்தையும் தில் ராஜு தயாரித்துவருகிறார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

வாரிசு இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் தில் ராஜு டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு... ஃபைட்டு வேணுமா ஃபைட் இருக்கு... என்று பேசியிருந்த வீடியோ சமூக வலைதளங்களில்  டிரெண்டானது. உணவு டெலிவரி ஆப் ஒன்று பிரியாணி வேணுமா பிரியாணி இருக்கு என விளம்பரம் செய்தது. அவர் பேசியதை இசை சேர்த்து பாடலாக உருவாக்கி நெட்டிஷன்கள் வைப் செய்தனர்.

இந்த நிலையில் அண்மையில் நடந்த பலகம் (Balagam) என்ற தெலுங்கு பட வெளியீட்டு விழாவில் பேசிய தில் ராஜு, ''இந்தப் படத்துல டான்ஸ் இல்ல.. ஃபைட் இல்ல... இந்த சினிமால விஜய் சார் பாடி லாங்குவேஜ் இல்ல... ஆனா இந்தப் படத்துல சூப்பர் எண்டர்டெயின்மென்ட் இருக்கு. சூப்பர் எமோஷனஸ் இருக்கு. சூப்பர் தெலங்கானா நேட்டிவிட்டி இருக்கு'' என்று பேசியிருக்கிறார். வாரிசு பட இசைவெளியீட்டு விழாவில் தான் பேசியதை ரசிகர்கள் கலாய்க்க, அதையே தன் தெலுங்கு படத்துக்கு புரமோஷனாக மாற்றியிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


வாரிசு படத்தைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துவரும் ஆர்சி 15 படத்தையும் தில் ராஜு தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்க, எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், அஞ்சலி, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் தான் நடிகராக அறிமுகமானார் தமன். மேலும் ஷங்கர் தயாரித்த ஈரம் படத்தில்தான் தமிழில் முதன்முறையாக இசையமைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருவரும் 3வது முறையாக இணைந்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Varisu